தரம்பூர் இராச்சியம்
தரம்பூர் இராச்சியம் ધરમપુર રિયાસત | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
1896-ஆம் ஆண்டில் பன்சடா இராச்சியம் மற்றும் தரம்பூர் இராச்சியங்களின் வரைபடம் | ||||||
தலைநகரம் | தரம்பூர் | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1980 | ||||
• | இந்திய விடுதலை, க்கு]]ப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1892 | 1,823 km2 (704 sq mi) | ||||
Population | ||||||
• | 1892 | 102,000 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | |||||
Rajput Provinces of India - Dharampur (Princely State) |
தரம்பூர் இராச்சியம் (Dharampur State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் தெற்கு குஜராத்தில் உள்ள வல்சாடு மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் தரம்பூர் ஆகும். 1892ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தரம்பூர் இராச்சியம் 1823 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,102,000 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.
வரலாறு
[தொகு]1680-ஆம் ஆண்டில் தரம்பூர் இராச்சியத்தை நிறுவியவர் இராஜபுத்திர குல சிசோடியா வம்சத்தின் சகாதேவன் ஆவார். மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த தரம்பூர் இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற தரம்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். தரம்பூர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர்.
இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் கீழ் செயல்பட்ட சூரத் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி தரம்பூர் இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது. தற்போது தரம்பூர் இராச்சியத்தின் பகுதிகள் வல்சாடு மாவட்டத்தில் உள்ளது.
ஆட்சியாளர்கள்
[தொகு]தரம்பூர் இராச்சிய மன்னர்கள் ராணா அல்லது மகாராணா பட்டத்துடன் ஆட்சி செய்தனர்.[1]
- அக்டோபர் 1680 - 1727 சகாதேவன்
- 1727 - 1758 இரண்டாம் இராமதேவன்
- 1758 - 1774 தர்மதேவன்
- 1774 - 1777 முதலாம் நரன்தேவ்
- 1774 - 1777 மகாராணி பாய் குஷால் - அரசப்பிரதிநிதி
- 1777 - 1784 இரண்டாம் சோமதேவன்
- 1777 - 1784 மகாராணி பாய் குஷால் (இரண்டாம் முறை) -அரசப்பிரதிநிதி
- 1784 - 1807 ரூப்தேவன்
- 1784 - 1800 மகாராணி பாய் குஷால் குன்வர்பா -அரசப்பிரதிநிதி
- 1807 - 1857 முதலாம் விஜயதேவன்
- 1857 - 20 Jan 1860 இராமதேவன் மூன்றாம் விஜயதேவன்
- 20 சனவரி 1860 – 17 செப்டம்பர் 1891 நாராயணதேவ இராமதேவன்
- 1891 - 26 மார்ச் 1921 மோகனதேவன் நாரயணதேவன்
- 26 மார்ச் 1921 – 15 ஆகஸ்டு 1947 விஜயதேவன் மோகன்தேவன்
இதனையும் காண்க
[தொகு]- சூரத் முகமை
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indian states before 1947 A-J". rulers.org. பார்க்கப்பட்ட நாள் 2019-08-13.
வெளி இணைப்புகள்
[தொகு]