உள்ளடக்கத்துக்குச் செல்

சோட்டா உதய்பூர் இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோட்டா உதய்பூர் இராச்சியம்
છોટાઉદેપુર રિયાસત
Type of subdivision of (the) Former Country
1743–1948 →
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of சோட்டா உதய்பூர்
Location of சோட்டா உதய்பூர்
ரேவா கந்தா முகமையில் பச்சை நிறத்தில் சோட்டா உதய்பூர் இராச்சியம்
தலைநகரம் சோட்டா உதய்பூர்
வரலாறு
 • நிறுவப்பட்டது 1743
 • சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
பரப்பு
 • 1901 2,305 km2 (Expression error: Unrecognized punctuation character ",". sq mi)
Population
 • 1901 64,621 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் குஜராத், இந்தியா

சோட்டா உதய்பூர் இராச்சியம் (Chhota Udaipur State or 'Princely State of Chhota Udaipur'), (குசராத்தி: છોટાઉદેપુર; இந்தி: छोटा उदैपुर)[1] 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் இருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரமாக சோட்டா உதய்பூர் இருந்தது. இது தற்கால குஜராத் மாநிலத்தின் கிழக்கில் அமைந்த சோட்டா உதய்பூர் மாவட்டப் பகுதிகளை கொண்டிருந்தது.[2] 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சோட்டா உதய்பூர் இராச்சியம் 2,305 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 64,621 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.

வரலாறு

[தொகு]

1743-ஆம் ஆண்டில் ராவல் உதய் சிங் என்பவரால் சோட்டா உதய்பூர் இராச்சியம் நிறுவப்பட்டது. 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சோட்டா உதய்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் ரேவா கந்தா முகமையின் கீழ் செயல்பட்டது.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சோட்டா உதய்பூர் இராச்சியம், பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, 1956-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள்

[தொகு]
  • 1762 – 1771 அர்சிஸ் சிங்
  • 1771 – 1777 இரண்டாம் ஹமீர் சிங்
  • 1777 – 1822 பீம்சிங் Bhimsinhji
  • 1822 – 1851 குமான் சிங்
  • 1851 – 1881 ஜித் சிங்
  • 1881 – 1895 மோட்டி சிங்
  • 1895 – 29 ஆகஸ்டு 1923 பதே சிங் (பிறப்பு. 1884 – இறப்பு. 1923)
  • 29 ஆகஸ்டு 1923 – 15 அக்டோபர் 1946 நட்வர் சிங் (பி. 1906 – இ. 1946)
  • 15 அக்டோபர் 1946 – 15 ஆகஸ்டு 1947 விரேந்திர சிங் (பி. 1907-. 25 சூன் 2005)[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Chhota Udaipur (Princely State)
  2. ↑ "Archived copy". Archived from the original on 9 December 2019. Retrieved 13 June 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. ↑ "Indian Princely States before 1947 A-J". www.worldstatesmen.org. Retrieved 2019-08-15.

வெளி இணைப்புகள்

[தொகு]