சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1919ல் பிரித்தானிய இந்தியாவில் சுதேச சமஸ்தானங்களும் (பச்சை நிறம்), பிரித்தானியர்கள் நேரடியாக ஆண்ட நிலப்பரப்புகளும் (சிவப்பு நிறம்)

சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் (Instrument of Accession) 1935 இந்திய அரசுச் சட்டத்தின் படி, இந்திய சுதேச மன்னராட்சிப் பகுதிகள், இந்தியப் பிரிவினைக்குப் பின் விடுதலையான இந்தியா அல்லது பாக்கித்தான் நாடுகளின் இணைப்பதற்கான ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம், 1935 இந்திய அரசுச் சட்டத்தின் நீட்சியாகும்.

பின்னணி[தொகு]

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் விடுதலை பெறுவதற்கு முன், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 565 மன்னராட்சிப் பகுதிகள் எனும் சுதேச சமஸ்தானங்கள், துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு தன்னாட்சியுடன் ஆண்டனர்.

ஆகஸ்டு 1947ல் இந்தியப் பிரிவினையின் போது, 1935 இந்திய அரசுச் சட்டத்தின் படி, செய்து கொண்ட இணைப்பு ஒப்பந்தப்படி, சுதேச சமஸ்தானங்கள், இந்தியா அல்லது பாகிஸ்தான் நாட்டுடன் இணைந்து கொள்ளலாம் என ஒப்புக்கொள்ளப்பட்டது.

புதிய நாடுகளுடன் சுதேச சமஸ்தானங்கள் இணைதல்[தொகு]

தற்கால இந்தியப் பகுதியில் இருந்த சுதேச சமஸ்தானங்கள் அனைத்தும் இந்தியாவுடன் இணைந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீர் இராச்சியம் மட்டும் இந்தியா அல்லது பாகிஸ்தான் நாடுகளுடன் இணையாது தனித்து செயல்பட முடிவெடுத்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் இராணுவம், ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மேற்கில் உள்ள ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்குப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது. இதனால் ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங் 26 அக்டோபர் 1947ல் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை இணைக்கும் ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்தில் மன்னர் ஹரி சிங் மற்றும் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு கையொப்பம் இட்டனர். [1] இந்த ஒப்பந்தத்திற்கு, இந்தியத் தலைமை ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு 27 அக்டோபர் 1947ல் அனுமதி அளித்தார். அதன் படி ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் பாதுகாப்பு இந்தியாவின் கையில் வழங்கப்பட்டது. [1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]