மும்பை மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பம்பாய் மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மும்பை மாகாணத்தின் வடபகுதி (1909)
மும்பை மாகாணத்தின் தென்பகுதி (1909)

மும்பை மாகாணம் அல்லது பம்பாய் மாகாணம் (Bombay Presidency) பிரித்தானிய இந்தியாவின் ஒரு நிருவாகப் பிரிவு. கிபி 1661ல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஒரு வர்த்தக நிலையமாகத் தொடக்கப்பட்ட இது காலப்போக்கில் வளர்த்து மேற்கு மற்றும் நடு இந்தியாவின் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய மாகாணமானது. தற்காலப் பாகிஸ்தானின் சில பகுதிகளும் அரேபிய மூவலந்தீவின் சில பகுதிகளும் கூட இதில் அடங்கியிருந்தன. தற்கால குஜராத் மாநிலம், மகாராட்டிர மாநிலம், கொங்கணம், தேஷ், கான்தேஷ் பகுதிகள், கர்நாடகத்தின் வட மேற்குப் பகுதி, பாக்கிஸ்தானின் சிந்து மாகாணம் மற்றும் யெமன் நாட்டின் ஏடன் நகரம் ஆகிய பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bombay Presidency
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_மாகாணம்&oldid=2800929" இருந்து மீள்விக்கப்பட்டது