நாசிக் மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகாராட்டிரா மாநிலத்தில் நாசிக் மண்டலம்

நாசிக் மண்டலம்[தொகு]

இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்றாகும். வரலாறு சிறப்புமிக்க காந்தேஷ் பிரதேசம் இம்மண்டலத்தின் வடக்குப் பகுதியில் தபதி நதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.இந்த மண்டலத்தின் எல்லைகளாக மேற்கில் கொங்கண் மண்டலமும் குசராத்மாநிலமும், வடக்கே மத்தியப் பிரதேசமாநிலமும், கிழக்கே அமராவதி மண்டலம் மற்றும் ஔரங்காபாத் மண்டலம் (மராத்வாடா)வும், தெற்கே புணே மண்டலமும் அமைந்துள்ளன.

சில புள்ளிவிவரங்கள்[தொகு]

 • பரப்பு: 57,268 கிமீ²
 • மக்கட்தொகை (2001 கணக்கெடுப்பு):15,774,064
 • மாவட்டங்கள்(மக்கட்தொகை): அகமதுநகர்(4,088,077), துலே(1,708,993), ஜல்காவ்ன்(3,679,936) நன்தர்பார்(1,309,135), நாசிக்(4,987,923)
 • படிப்பறிவு: 71.02%
 • அதிக மக்கள் வசிக்கும் நகர்: நாசிக்
 • மிக வளர்ச்சியடைந்த நகர்: நாசிக்
 • படிப்பறிவு மிக்க நகர்: நன்தர்பார்
 • மிகப் பரந்த நகர்: நாசிக்
 • பாசனபரப்பு: 8,060 கிமீ²
 • முக்கியப் பயிர்கள்: திராட்சை, வெங்காயம், கரும்பு, சோளம், பருத்தி, வாழை, மிளாகாய், கோதுமை, அரிசி,மாதுளை

வரலாறு[தொகு]

இந்திய விடுதலைக்குப் பின்னரும் மகாராட்டிரம் உருவானபின்னரும் மாவட்டங்களின் பெயர்களில் மாற்றமும் சில சேர்க்கைகளும் உண்டாயின. சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்:

 • துளே மாவட்டத்தின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளிலிருந்து நன்தர்பார் மாவட்டம்(பழங்குடியினர்)உருவானது.
 • கிழக்கு காந்தேஷ் மாவட்டம் துலே மாவட்டமெனவும் மேற்கு காந்தேஷ் மாவட்டம் ஜல்காவ்ன் மாவட்டம் எனவும் மறுபெயரிடப்பட்டது.
 • தற்போதைய நாசிக் மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு மாலேகாவ்ன் மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.
 • தற்போதைய அகமதுநகர் மாவட்டத்திலிருந்து தென்பகுதிகள் பிரிக்கப்பட்டு ஸ்ரீராம்பூர் மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாசிக்_மண்டலம்&oldid=3359517" இருந்து மீள்விக்கப்பட்டது