குசராத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குசராத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ગુજરાત

گوجارات

—  மாநிலம்  —

முத்திரை
Clockwise from top: குஜராத் உயர் நீதிமன்றம், துவாரகை கடற்கரை, இலக்குமி விலாஸ் அரண்மனை, காங்கரியா ஏரிக்கரை, காந்தி ஆசிரமம், கட்ச் மாவட்டத்தின் உப்புப் பாலைவனம்.
காந்திநகர்
இருப்பிடம்: ગુજરાત
அமைவிடம் 23°13′00″N 72°41′00″E / 23.2167°N 72.6833°E / 23.2167; 72.6833ஆள்கூறுகள்: 23°13′00″N 72°41′00″E / 23.2167°N 72.6833°E / 23.2167; 72.6833
நாடு  இந்தியா
மாநிலம் குசராத்து
மாவட்டங்கள் 33
நிறுவப்பட்ட நாள் 1 மே 1960
தலைநகரம் காந்திநகர்
மிகப்பெரிய நகரம் அகமதாபாத்
ஆளுநர்
முதலமைச்சர்
ஆளுநர் டாக்டர் கமலா பெனிவால்
முதலமைச்சர் ஆனந்தி பென் படேல்
முதன்மை நீதிபதி உயர்திரு. எஸ். ஜே. முக்கோபாத்யா
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (182)
மக்கள் தொகை

அடர்த்தி

50 (10th) (2000)

258/km2 (668/sq mi)

ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg
0.621 (medium) (14th)
கல்வியறிவு 69.8% (6th)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 196024 கிமீ2 (75685 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-GJ
இணையதளம் www.gujaratindia.com

குசராத்து (குஜராத்தி: ગુજરાત, சிந்தி: گوجارات, Gujarat) இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலத்தில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளது. இது இந்தியாவில் மகாராட்டிரத்திற்கு அடுத்து நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகும். இதன் வடமேற்கில் பாகிஸ்தானும் வடக்கில் ராஜஸ்தானும் , மேற்கில் மத்திய பிரதேசம் மற்றும் தெற்கில் மகாராட்டிரம் எல்லைகளாக அமைந்துள்ளன.

காந்தி நகர் இதன் தலைநகராகும். இது மாநிலத்தின் முன்னாள் தலைநகரும் பொருளாதாரத் தலைநகருமான அகமதாபாத்தின் அருகில் அமைந்துள்ளது.

மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லப்பாய் படேல் ஆகியோர் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாவர்.

வரலாறு[தொகு]

குசராத்து - அரசு குறியீடுகள்
அலுவல் மொழி(கள்) குஜராத்தி மொழி
பாடல் ஜெய ஜெய கராவி குஜராத்
நடனம் கர்பா நடனம்
விலங்கு ஆசிய சிங்கம்
பறவை செந்நாரை

குசராத்து (குஜராத்து) என்னும் பெயர் மத்திய ஆசியாவில் இருந்து இன்றைய குஜராத்துக்கு குடிபெயர்ந்த குர்ஜ் இன மக்களிடம் இருந்து தோன்றியதாக வரலாறு. குர்ஜ் இன மக்கள் இன்றைய ஜார்ஜியா (பண்டைய காலத்தில் குர்ஜிஸ்தான் என்று அழைக்கப்பட்டது) நாட்டிலிருந்து கிமு முதலாம் நூற்றாண்டு வாக்கில் குடிபெயர்ந்தனர். கிபி 35 முதல் 405 வரை ஈரானிய சாகஸ் இன மக்களின் ஆட்சியின்கீழ் இருந்தது. பின்னர், சில காலம் இந்திய-கிரேக்க அரசாட்சியின்கீழ் இருந்தது. குசராத்தின் துறைமுகங்கள் குப்த பேரரசாலும், மௌரிய பேரரசாலும் பெரிதும் பயன்படுத்தபட்டன. ஆறாம் நூற்றாண்டுவாக்கில், குப்தர்களின் வீழ்சசிக்குபின், குசராத்து தன்னிலை பெற்ற இந்து அரசாக விளங்கியது. குப்த பேரரசின் சேனாதிபதியான மைதிரேகாவின் குலவழிகள், ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வல்லாபியை தலைநகராக கொண்டு குசராத்தை அரசாண்டனர். கிபி 770களில் அரேபிய படையெடுப்பார்களின் முயற்சியால் வல்லாபி ஆட்சி முடிவுக்கு வந்தது. கிபி 775ல், பார்சி இன மக்கள் ஈரானிலிருந்து, குசராத்தில் குடியெறத் துவங்கினர். பின்னர், எட்டாம் நூற்றாண்டில் பிரத்திகா குல அரசர்களாலும், ஒன்பதாம் நூற்றாண்டில் சோலன்கி குல அரசர்களாலும் அரசாளப்பட்டது. பல இசுலாமிய படையெடுப்புகளையும் தாண்டி சோலன்கி ஆட்சி 13ம் நூற்றாண்டின் கடைசி வரை தொடர்ந்தது.

கிபி 1024 – கிபி 1850[தொகு]

குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்

கி. பி. 1024-1025இல் கஜினி முகமது, சோமநாதபுரம் (குசராத்து) மீது 17 முறை படையெடுத்து கோயில் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றார். [[கி. பி 1297- 1298 ல் அலாவுதீன் கில்சி, தில்லி சுல்தான் , அன்கில்வாரா நகரை அழித்து குசராத்தை தில்லி சுல்தானகத்துடன் இணைத்தார். 14ம் நூற்றாண்டின் கடைசியில், தில்லி சுல்தானியம் பலவீனம் அடைந்த நிலையில், தில்லி சுல்தானியத்தின் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த ஜபர்கான் முசாப்பர் தன்னை முழு ஆட்சியாளராக அறிவித்துகொண்டார். அவனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவனது மகன் அகமது ஷா, அகமதாபாத் நகரை நிறுமானம் செய்து, அந்நகரை தன் தலைநகராய் கொண்டு கிபி 1411 முதல் 1442 வரை ஆட்சி செய்தார். குசராத்து சுல்தானியத்தின் கிபி 1576 ஆம் ஆண்டு, பேரரசர் அக்பரின் படையெடுப்பின் முலம் முடிவுக்கு வ்ந்தது. மொகலாயர்களுக்கு பின் மராட்டிய மன்னர்களாலும், குறுநில மன்னர்களாலும் ஆட்சிசெய்யப் பட்டது.

கி.பி 1614 - கி.பி1947[தொகு]

போர்த்துகீசர்கள் தமது ஏகாதிபத்தியத்தை குசராத்தின் துறைமுக நகர்களான தாமன், தியு ஆகிய இடங்களிலும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய இடங்களிலும் நிறுவினர். பிரித்தானியாவின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், 1614ல், தனது முதல் தொழில்சாலையை சூரத்து நகரில் நிறுவியது. மராட்டிய அரசுகளுடன் நடந்த இரண்டாம் ஆங்கிலேய- மராட்டிய போரின் முலம் பெரும்பான்மையான பகுதிகளை ஆங்கிலேயர் கைப்பற்றினர். குறுநில ஆட்சியாளர்களிடம் பல அமைதி ஓப்பந்தங்களை உருவாக்கி, அவர்களுக்கு குறைந்த சுயாட்சி வழங்கி, அனைத்து பகுதிகளையும் தம் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தனர்.

இந்திய விடுதலை போராட்டம்[தொகு]

இந்திய விடுதலை போராட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், மொரார்ஜி தேசாய், மற்றும் பாகிஸ்தானின் முதல் கவனர் செனரலான முகமது அலி ஜின்னா போன்றவர்கள் குசராத்தைச் சேர்ந்தவர்கள்.

விடுதலைக்குப் பின்[தொகு]

இந்திய விடுதலைக்குப்பின், இந்திய அரசு, பல சிறிய அரசுகளாக இருந்த குசராத்தை பம்பாய் மாகாணம் அமைக்கப்பட்டது. 1960 ம் ஆண்டு மே மாதம் முதலாம் நாள், பம்பாய் மாகாணத்தை மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு மகராஷ்டிரா மாநிலமும், குசராத்து மாநிலமும் அமைக்கப்பட்டன. குசராத்து மாநிலத்தின் தலைநகராக அகமதாபாத் நகர் தேர்வு செய்யப்ப்ட்டது. பின், 1970ல் காந்திநகருக்கு மாற்றப்பட்டது.

மாவட்டங்கள்[தொகு]

மாவட்டக் குறியிடு மாவட்டம் மாவட்டத் தலைமையிடம் மக்கட்தொகை
2001 Census[1]
மக்கட்தொகை
2011 Census[1]
பரப்பளவு (km²) அடர்த்தி ( per km²)
2011
துவக்கப்பட்ட ஆண்டு
AH அகமதாபாத் அகமதாபாத் 5,808,378 6,959,555 5,404 1,288
AM அம்ரேலி அம்ரேலி 1,393,295 1,513,614 6,760 206
AN ஆனந்த் ஆனந்த் 1,856,712 2,090,276 2,942 711 1997
AR ஆரவல்லி மோதசா 1,007,977 3,159 319 2013
BK பனஸ்கந்தா பாலன்பூர் 2,502,843 3,116,045 12,703 290
BR பரூச் பரூச் 1,370,104 1,550,822 6,524 238
BV பவநகர் பவநகர் 2,469,264 2,388,291 8,334 287
போடாட் போடாட் 2013
சோட்டா உதய்பூர் சோட்டா உதய்பூர் 2013
DA தகோத் தகோத் 1,635,374 2,126,558 3,642 583 1997
DG டாங் ஆக்வா 186,712 226,769 1,764 129
தேவபூமி துவாரகை காம்பாலியம் 2013
GA காந்திநகர் காந்திநகர் 1,334,731 1,387,478 2163 641 1964
JA ஜாம்நகர் ஜாம்நகர் 1,913,685 2,159,130 8,441 176
JU ஜூனாகாத் ஜூனாகத் 2,448,427 1,159,727 3,932.5 295
KA கட்ச் புஜ் 1,526,321 2,090,313 45,652 33
KH கேதா நாடியாத் 2,023,354 1,544,831 2,381 649
MH மகிசாகர் லூனாவாடா 1,551,709 3,998 388 2013
MA மகிசனா மெகசானா 1,837,696 2,027,727 4,386 419
மோர்பி மோர்பி 2013
NR நர்மதா ராஜ்பிப்லா 514,083 590,379 2,749 187 1997
NV நவ்சாரி நவ்சாரி 1,229,250 1,330,711 2,211 556 1997
PM பஞ்சமகால் கோத்ரா 2,024,883 1,590,661 3,060 520
PA பதான் பதான் 1,181,941 1,342,746 5,738 206 2000
PO போர்பந்தர் போர்பந்தர் 536,854 586,062 2,294 234 1997
RA ராஜ்கோட் ராஜ்கோட் 3,157,676 3,021,914 7,617 397
SK சபர்கந்தா இம்மத்நகர் 2,083,416 1,425,827 4,100.5 348
கிர்சோம்நாத் வேராவல் 1,601,161 4,915 326 2013
ST சூரத் சூரத் 4,996,391 6,079,231 4,418 1,376
SN சுரேந்திரநகர் சுரேந்திரநகர் 1,515,147 1,586,351 9,271 171
TA தபி வியாரா 719,634 806,489 3,249 248 2007
VD வதோதரா வடோதரா 3,639,775 3,249,008 4,674 695
VL வல்சத் வல்சத் 1,410,680 1,703,068 3,034 561 1966

2001 குசராத்து நிலநடுக்கம்[தொகு]

2001 ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் காலை 08:46 மணிக்கு நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கதிற்கு சுமார் 12,000 பேர் பலியாயினர். சுமார் 55,000 பேர் படுகாயமுற்றனர்.

குசராத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டமும் வேளாண்மை வளர்ச்சியும்[தொகு]

குசராத்தில் குறிப்பாக மழை வளம் மிகக் குறைவாக உள்ள கத்தியவார் தீபகற்பத்தில், குடிநீர் பற்றாக்குறை நீக்க்வும் மற்றும் வேளாண்மை வளர்ச்சி மேம்படுத்தவும் பசுமை புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வெற்றியும் அடைந்துள்ளது. ‡

சரணாலயங்கள்[தொகு]

குசராத் மாநிலத்தில் ஆசிய சிங்கங்களுக்கு பெயர்பெற்ற கிர் தேசியப் பூங்கா மற்றும் பிற விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான சரணாலயங்கள் உள்ளது.#

புனித தலங்கள்[தொகு]

2002 குசராத்து வன்முறை[தொகு]

கோத்ரா இரயில் நிலயத்தில், சபர்மதி விரைவு வண்டியில் பயணித்த பயணிகளுடன் இரயில் பெட்டியை எரித்த காரணத்தினால் அப்பாவி இந்து பயணிகள் 59 க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குற்றச் செயலுக்கான தீர்ப்பு 21.11.2011ல் குசராத் உயர்நீதிமன்றம் வெளியிட்டது↑. பிப்ரவரி 2002 ம் ஆண்டு இவ்வுணர்வு மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதில், 790 முஸ்லிம்களும், 254 இந்துகளும் கொல்லப்பட்டனர். சுமார் 2500 பேர் காயம் அடைந்தனர். [2] மத்திய மற்றும் மாநில அரசினை மனித உரிமைகள் கழகம் கடுமையாக கண்டித்துள்ளது.

மக்கள்[தொகு]

சமயவாரியாக மக்கள் தொகை [3]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 50,671,017 100%
இந்துகள் 45,143,074 89.09%
இசுலாமியர் 4,592,854 9.06%
கிறித்தவர் 284,092 0.56%
சீக்கியர் 45,587 0.09%
பௌத்தர் 17,829 0.04%
சமணர் 525,305 1.04%
ஏனையவர் 28,698 0.06%
குறிப்பிடாதோர் 33,578 0.07%

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Ranking of Districts by Population Size, 2001 and 2011". 2011 census of India. Government of India. பார்த்த நாள் 3 May 2012.
  2. "Gujarat riot death toll revealed". BBC News (2005). பார்த்த நாள் April 15, 2006.
  3. Census of india , 2001

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=குசராத்து&oldid=1819195" இருந்து மீள்விக்கப்பட்டது