பவநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவநாத் மகாதேவர் கோயில், பவநாத்

பவநாத் (Bhavnath) இந்தியாவின் மாநிலமான குஜராத்தின் ஜூனாகாத் மாவட்டத்தின் தலைமையிடமான ஜூனாகத் நகரத்தின் அருகே கிர்நார் மலையின் அடிவாரத்தில் அமைந்த சிறு கிராமம் ஆகும்.

வரலாறு[தொகு]

கிர்நார் மலை அடிவாரத்தில் உள்ள பவநாத் கிராமத்தில் மகாதேவர் கோயில் உள்ளது. [1] பவநாத்தில் உள்ள கிர்நார் மலையில் அசோகர் கல்வெட்டுக்கள் உள்ளது.

விழாக்கள்[தொகு]

இந்து மற்றும் சமணர்களுக்கு புனிதமான பவநாத் கிராமத்தில், ஆண்டு தோறும், மகா சிவராத்திரியும் கிர்நார் கிரிவலம் விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.[2]

மாசி மாத மகா சிவராத்திரி ஒட்டி ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவின் போது இராஜஸ்தானின் மேவார், குஜராத்தின் கட்ச், உத்திரப் பிரதேசத்தின் அயோத்தி மற்றும் மதுரா பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் நாகா சாதுக்களும் இங்கு வருகின்றனர். [3] [4]

கிரிவலம் நிகழ்வின் போது தத்தாத்ரேயர் ஐந்து நாட்கள் பவநாத் கிராமத்தில் தங்கியிருப்பார் என இந்துக்கள் கருதுகிறார்கள்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம் History of Bhavnath at GujaratTourism.com
  2. [2] Bhavnath Festival, Mahashivratri
  3. "Bhavnath fair". 2016-09-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-09-10 அன்று பார்க்கப்பட்டது.
  4. Bhavnath Fair
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவநாத்&oldid=3562158" இருந்து மீள்விக்கப்பட்டது