விக்டோரியா பார்க், பாவ்நகர்
- இதே பெயரிலுள்ள பிற இடங்களைப் பற்றி அறிய விக்டோரியா பார்க் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
விக்டோரியா பார்க் (Victoria Park, Bhavnagar) என்னும் சுற்றுலாத் தலம், இந்திய மாநிலமான குஜராத்திலுள்ள பாவ்நகரில் உள்ளது. இது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியாகும். இது 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா எல்லா நாட்களிலும் திறந்திருக்கும்.[1] இங்கு விற்கும் செடிகளை பார்வையாளர்கள் வாங்கிச் செல்லலாம்.
உயிரினங்கள்
[தொகு]இங்கு அரிய வகை செடிகளையும், விலங்குகளையும் காண முடியும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள கவுரிசங்கர் ஏரியில் இருந்து காட்டுப் பகுதிகளை கண்டு களிக்கலாம். இங்கு நரிகளையும், மான்களையும், கழுதைப்புலிகளையும் காணலாம்.[1] பறவை விரும்பிகள் கவுரிசங்கர் ஏரியில் நீர்ப்பறவைகளை காணலாம்.
போக்குவரத்து
[தொகு]பாவ்நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அடிக்கடி பேருந்துகள் வந்து செல்கின்றன. நகரத்தின் மற்ற பகுதிகளில் இயங்கும் தனியார் ஆட்டோக்களும் இங்கு வந்து செல்கின்றன.
தங்குமிடம்
[தொகு]பூங்காவுக்கு அருகிலேயே சில தங்கும் விடுதிகள் உள்ளன.