கிர்நார் சமணக் கோயில்கள்

ஆள்கூறுகள்: 21°31′36″N 70°31′20″E / 21.5266295°N 70.5222246°E / 21.5266295; 70.5222246
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிர்நார் சமணக் கோயில்கள்
குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் நகரம் அருகில் கிர்நார் மலையில் சமணக் கோயில்களின் காட்சி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கிர்நார் மலை, ஜூனாகத் அருகில் ஜூனாகத் மாவட்டம், குஜராத், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்21°31′36″N 70°31′20″E / 21.5266295°N 70.5222246°E / 21.5266295; 70.5222246
சமயம்சமணம்
கிர்நார் மலை சமணக் கோயில்களின் காட்சி
நேமிநாதர் கோயில்

கிர்நார் சமணக் கோயில்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான ஜூனாகத் நகரத்திற்கு கிழக்கில் 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிர்நார் எனும் ரைவத மலையில் கடல் மட்டத்திலிருந்து 2370 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 16 கோயில்கள் கொண்ட இம்மலைக்கோயில்களுக்குச் செல்ல 3800 படிக்கட்டுகள் உள்ளது. இக்கோயில்கள் பளிங்கு கற்களால் நிறுவப்பட்டது.[1][2] இந்த சமணத்தின் திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் பிரிவினர்களுக்கு பொதுவானது.

24 தீர்த்தங்கரர்களில் 22வது தீர்த்தங்கரரான அரிஷ்டநேமி எனப்படும் நேமிநாதர் கிர்நார் மலையில் முக்தி அடைந்ததார். இக்கோயில் நேமிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். நேமிநாதர் கோயில் செவ்வக வடிவத்தில் 195 x 130 அடி நீள, அகலம் கொண்டது. [1][2] சாளுக்கியப் பேரரசர் செயசிம்ம சித்தராசன் (ஆட்சி:1092 – 1142) ஆட்சிக் காலத்தில் சௌராட்டிரா பிரதேச ஆளுநராக இருந்த சஜ்ஜனா என்பவர் இக்கோயில்களை மறுசீரமைத்து நிறுவினார்.[3][4]இக்கோயில்களில் நேமிநாதர் கோயில் கருவறையில் கருங்கல்லால் நேமிநாதரின் சிற்பம், உள்ளங்கையில் சங்கு ஏந்தி அமர்ந்த நிலையில் நிறுவப்பட்டுள்ளது.[1][2]

பிற முக்கியக் கோயில்கள்[தொகு]

 • ஆதிநாதர் கோயில்
 • ஐந்து கொடுமுடிகள் கொண்ட பஞ்ச மேரு கோயில் 1859ம் ஆண்டில் கட்டப்பட்டது.[5]
 • குமாரபாலரின் கோயில்
 • வாஸ்துபால விகாரை
 • சம்பிரதி ராஜா கோயில்
 • அம்பிகா மாதா கோயில்
 • சௌமுகி கோயில்

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Murray 1911, ப. 155-157.
 2. 2.0 2.1 2.2 Burgess 1876, ப. 166.
 3. Dhaky 2010, ப. 102.
 4. Madhusudan Dhaky (1961). Deva, Krishna. ed. "The Chronology of the Solanki Temples of Gujarat". Journal of the Madhya Pradesh Itihas Parishad (Bhopal: Madhya Pradesh Itihas Parishad) 3: 43–44, 54-55. http://vmis.in/Resources/digital_publication_popup?id=136#page/44. 
 5. Burgess 1876, ப. 168.

உசாத்துணை[தொகு]