நர்மதா மாவட்டம்



நர்மதா மாவட்டம் (Narmada district) இந்தியாவின், குஜராத் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் ஒன்று. இது மத்திய குஜராத்தில் அமைந்துள்ளது. இம் மாவட்டத் தலைமையகம் ராஜ்பிப்லா நகராகும்.[1].
மாவட்டத்தின் பரப்பளவு 2,755 சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை 5,90,379 . [2] குஜராத்தில் மக்கட்தொகை கொண்ட மாவட்டங்களில் இது மூன்றாவதாகும்.[3]
அமைவிடம்[தொகு]
வடக்கே வதோதரா மாவட்டம், கிழக்கே மகாராஷ்டிர மாநிலம், தெற்கே தபி மாவட்டம், மேற்கே பரூச் மாவட்டம் எல்லைகளாக கொண்டமைந்துள்ளது நர்மதா மாவட்டம்.
வரலாறு[தொகு]
வதோதரா மாவட்டம் மற்றும் பரூச் மாவட்டம் ஆகியவற்றின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இம்மாவட்டம் 2 அக்டோபர் 1997இல் உருவானது.[4]
வருவாய் வட்டங்கள்[தொகு]
நர்மதா மாவட்டம் ஐந்து வட்டங்களைக் கொண்டது.[5]
- நாண்டோட்
- சக்பாரா
- டெடியாபாடா
- திலக்வாடா
- கருடேஸ்வர்
பொருளாதாரம்[தொகு]
2006இல் இந்திய நடுவண் அரசின், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவித்த இந்தியாவின் 640 மாவட்டங்களில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் என அறிவிக்கப்பட்ட 250 மாவட்டங்களில் நர்மதா மாவட்டமும் ஒன்று.[6]
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கட்தொகை 590,379.[3] மக்கட்தொகை அடர்த்தி, ஒரு சதுர கி.மீட்டருக்கு 214 நபர்கள். பாலினவிகிதம் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள். எழுத்தறிவு விகிதம் 73.29%. [3]
சுற்றுலாத் தலங்கள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.onefivenine.com/village.dont?method=displayVillage&villageId=251256
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-04-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150425105619/http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm.
- ↑ 3.0 3.1 3.2 "District Census 2011". Census2011.co.in. 2011. http://www.census2011.co.in/district.php. பார்த்த நாள்: 2011-09-30.
- ↑ "About District". Narmada District Panchayat. http://narmadadp.gujarat.gov.in/narmada/english/index.htm.
- ↑ [ https://narmada.nic.in/tehsil/ நர்மதா மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 5, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405033402/http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf. பார்த்த நாள்: September 27, 2011.
வெளி இணைப்புகள்[தொகு]
- நர்மதா மாவட்டத்தின் இணையதளம்
- கூகுள் வரைபடத்தில் நர்மதா மாவட்டம்
- நர்மதா மாவட்டத்தில் பார்க்கவேண்டிய இடங்கள்