நாடியாத்
Appearance
நாடியாத்
படித்தோர் மிக்க நகரம் | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | கேதா மாவட்டம் |
அரசு | |
• தலைவர் | சகாயாபென் படேல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 45.16 km2 (17.44 sq mi) |
ஏற்றம் | 35 m (115 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,25,132 |
• அடர்த்தி | 5,000/km2 (13,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சலக சுட்டு எண் | 387 001 மற்றும் 387 002 |
தொலை பேசி குறியீடு எண் | 0268 |
வாகனப் பதிவு | GJ-7 |
இணையதளம் | nadiadmunicipality |
நாடியாத் (Nadiad), இந்தியா, குஜராத் மாநிலத்தின் கேதா மாவட்டத்தின் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றமும் ஆகும்.
வரலாறு
[தொகு]கழைக்கூத்தாடிகள் தங்கியிருந்த காரணத்தினால், இந்நகருக்கு நாடியாத் என்று வழங்கலாயிற்று. நாடியாத் நகரம் ஒன்பதாம் எண்னுக்கு பெயர் பெற்றது. நாடியத் நகரத்தின் ஒன்பது சாலைகள், 9 கிராமங்கள் அல்லது நகரங்களைக் நோக்கிச் செல்கிறது. 9 ஏரிகள் நகரத்தைச் சுற்றி அமைந்துள்ளன. படித்தவர்களின் நகரம் என்ற பெருமை பெற்றது.
இந்நகரத்தை துவக்கத்தில் இசுலாமியர்களும், பின்னர் பரோடாவின் கெய்க்வாட் இந்து மன்னர்களும் ஆண்டனர்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு தற்காலிக கணக்கெடுப்பின்படி இந்நகர மக்கட்தொகை 192,799ஆக உள்ளது.[1]. எழுத்தறிவு 95 விழுக்காடாக உள்ளது.
பார்க்க வேண்டிய இடங்கள்
[தொகு]- சாந்தாராம் கோயில்
- மாதா மாய் கோயில்
- மாகாளி கோயில்
- பைரவர் கோயில்
தொழில்கள்
[தொகு]நாடியாத் நகரம் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், துணி ஆலைகள், மர வனிகம் ஆகியவற்றிக்குப் பெயர் பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
வெளி இணைப்புகள்
[தொகு]- நாடியாத் நகராட்சி மன்ற இணையதளம்
- நாடியாத் நகரம்
- புனித ஆன் மேனிலைப்பள்ளி, நாடியத் பரணிடப்பட்டது 2020-09-24 at the வந்தவழி இயந்திரம்
- கேதா மாவட்டக் குறிப்புகள் பரணிடப்பட்டது 2011-11-23 at the வந்தவழி இயந்திரம்
- பேருந்து வசதிகள்
- நாடியாத் நகரம்