மோர்பி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மோர்பி
மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
நிறுவிய நாள்15 ஆகத்து 2013
மொழிகள்
 • அலுவலக மொழிகள்குஜராத்தி மொழி, இந்தி மொழி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுGJ-36
இணையதளம்https://morbi.nic.in


15-8-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்

மோர்பி மாவட்டம் (Morbi district) (குசராத்தி: મોરબી જિલ્લો) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 15 ஆகஸ்டு 2013-இல் புதிதாக துவக்கப்பட்ட 7 புதிய மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] [2]இம்மாவட்டம் இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. மாவட்டத் தலைமையகம் மோர்பி நகரம் ஆகும். இது ராஜ்கோட் நகரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மோர்பி மாவட்டத்திற்கு, வடக்கே கட்ச் மாவட்டம், கிழக்கே சுரேந்திரநகர் மாவட்டம், தெற்கே ராஜ்கோட் மாவட்டம், மேற்கே ஜாம்நகர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

குஜராத்தி மொழியில் மோர்பி எனில் மயில் எனப் பொருள். பூஜ் நாட்டு மன்னர் (king of Bhooj) மயில் எனப்பொருள் விளங்கும்படி இப்பகுதிக்கு மோர்பி எனப் பெயரிட்டார்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி, மோர்பி மாவட்ட மக்கட்தொகை 9,60,329 ஆகும். இதன் பரப்பளவு 4871.5 சதுர கி.மீ., ஆகும். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு மக்கள்தொகை அடர்த்தி 207 நபர்கள். மாவட்ட சராசரி எழுத்தறிவு 84.59% ஆகும்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் 5 வருவாய் வட்டங்களும், 349 கிராம ஊராட்சிகளும் கொண்டது.[3]

வருவாய் வட்டங்கள்[தொகு]

  1. மோர்பி
  2. மாலியா
  3. டங்காரா
  4. வான்கனேர்
  5. ஹல்வத்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Next Republic Day, Gujarat will be bigger...". Indian Express. 7 October 2012. http://www.indianexpress.com/news/next-republic-day-gujarat-will-be-bigger.../1013137/0. பார்த்த நாள்: 19 October 2012. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-04-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. மோர்பி மாவட்ட வருவாய் வட்டங்களும், கிராம ஊராட்சிகளும்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்பி_மாவட்டம்&oldid=3363045" இருந்து மீள்விக்கப்பட்டது