இலக்குமி விலாஸ் அரண்மனை
இலக்குமி விலாஸ் அரண்மனை | |
---|---|
![]() | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலைப் பாணி | இந்தோ-சாரசானிக் கட்டிடக் கலை, மராத்தியம் |
நகர் | வதோதரா, குஜராத் |
நாடு | இந்தியா |
நிறைவுற்றது | 1890 |
கட்டுவித்தவர் | மகாராஜா சாயாஜிராவ் மூன்றாம் கெய்க்வாட் |
இலக்குமி விலாஸ் அரண்மனை என்பது மராத்திய பேஷ்வாக்களின் ஒரு பிரிவினரான, கெயிக்வாட் குலத்தவர்கள் ஆண்ட பரோடா இராச்சியத்தின் மகாராஜக்கள் கட்டிய அரண்மனைத் தொகுதியாகும்.
இவ்வரண்மனைகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வதோதரா நகரத்தில் உள்ளது.
வரலாறு[தொகு]

இலக்குமி விலாஸ் அரண்மனை, பரோடா சமஸ்தானத்தின் மன்னர் மகாராஜா சாயாஜிராவ் மூன்றாம் கெயிக்வாட் என்பவரால், 1,80,000 பிரித்தானிய பவுண்டு செலவில், இந்தோ-சாசனிக் கட்டிடக் கலையில் 1890ல் கட்டப்பட்டது.
பரோடா சமஸ்தான குடும்பத்தவர்களின் வாழ்விடமான இலக்குமி விலாஸ் அரண்மனை, லண்டன் பக்கிங்காம் அரண்மனையை விட நான்கு மடங்கு கொண்டது. தற்கால நவீன வசதிகளுடன் 1890ல் கட்டப்பட்ட இவ்வரண்மனையின் மாடிகளில் செல்வதற்கு மின்தூக்கிகள் பயன்படுத்தப்பட்டது.
500 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தில் அரச குடும்பத்தினர், அரச அலுவலர்கள், அரச விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்கான பெரிய கட்டிடங்கள் உள்ளது. அவற்றில் மோதி தோட்ட அரண்மனை மற்றும் மகராஜா பதே சிங்க் அருங்காட்சியகம் குறிப்பிடத்தக்கது.

1930ல் இலக்குமி விலாஸ் அரண்மனை வளாகத்தில், பரோடா மன்னர் பிரதாப் சிங், தனது பிரித்தானிய விருந்தினர்களுக்கான கோல்ப் விளையாட்டுத் திடலை அமைத்தார்.
1990ல் பரோடா மன்னர் பிரதாப் சிங்கின் பேரனும், முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரருமான சமர்ஜித்சிங், இலக்கு விலாஸ் அரண்மனை வளாகத்தின் கோல்ப் விளையாட்டுத் திடலை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.[1]
திரைப்படங்கள்[தொகு]
இலக்குமி விலாஸ் அரண்மனையில் கீழ்கண்ட இந்தி திரைப்படங்கள் எடுக்கப்பட்டது.
- பிரேம் ரோக், 1982
- கிராண்ட் மஸ்தி
- ரங்க் ரகசியம்
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Lukshmi Vilas Palace - Baroda". Gujarat Tourism. 2017-07-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)
- Grand Masti makers shoot at historical Laxmi Vilas Palace பரணிடப்பட்டது 2013-11-05 at the வந்தவழி இயந்திரம்; Hindustan Times
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் Laxmi Vilas Palace தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.