கெயிக்வாட்
கெயிக்வாட் வம்சம் गायकवाड साम्राज्य | |||||
முன்னாள் முடியாட்சி | |||||
| |||||
கொடி | |||||
1909ல் பரோடா இராச்சியம் | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1721 | |||
• | 1947ல் இந்திய அரசுடன் இணைத்தல் | 1947 | |||
பரப்பு | 8,182 சதுர கிலோ மீட்டர் km2 (Expression error: Unrecognized punctuation character "ச". sq mi) |
கெயிக்வாட் (Gaekwad or Gaikwad) மராத்திய இந்து வம்சமாகும்.[1] கெயிக்வாட் வம்சத்தவர்கள் மேற்கிந்தியாவின் தற்கால குஜராத் மாநிலத்தின் பெரும் பகுதிகள் கொண்ட பரோடா இராச்சியத்தை 1721 முதல் 1947 முடிய ஆண்டனர். [2]
கெயிக்வாட் வம்சத்தவர்கள் ஆண்ட பரோடா இராச்சியத்தின் தலைநகரம் வடோதரா நகரம் ஆகும். பரோடாவின் முதல் கெயிக்வாட் வம்ச மன்னர் முதலாம் தாமாஜி ஆவார். இறுதி மன்னர் சாயாஜி ராவ் ஆவார். [3]
1803–1805இல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் பரோடா அரசின் மன்னர், ஆங்கிலேயர்கள் வகுத்த துணைப் படைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு, பிரித்தானிய இந்தியாவுக்கு அடங்கிய மன்னர் அரசு சுதேச சமஸ்தானமாக விளங்கியது. [4]
முந்தைய வரலாறு
[தொகு]மராட்டியப் பேரரசின் படைத்தலைவர்களில் ஒருவரான பிலாஜி ராவ் கெயிக்வாட், 1721ல் பரோடாவை, முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார். மராத்தியப் படைகளை பராமரிக்க, மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சர், பிலாஜி ராவ் கெயிக்வாட்டிற்கு, பரோடா பகுதிகளை நில மானியமாக வழங்கினார்.
1761ல் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரில் மராத்திய பேஷ்வா சதாசிவராவ் பாகுவுடன், கெயிக்வாட் வம்ச மன்னர் தாமாஜியும் பங்கு கொண்டார். போரில் மராத்தியப் படைகள் பெரும் தோல்வி கண்டதால், மராத்திய பேரரசு தொய்வடைந்தது.
இதன் விளைவாக குஜராத்தின் கெயிக்வாட் வம்சத்தவர்கள், குவாலியரின் ஹோல்கர்கள், இந்தூரின் சிந்தியாக்கள் தன்னாட்சி உரிமையுடன் தங்கள் தங்காள் பகுதியை ஆண்டனர். ஆனால் மராத்தியப் பேரரசின் சாத்தாரா இராச்சிய மன்னர் போன்சலே வம்சத்தவர்களை தங்களின் மகாராஜாவாகவும் மற்றும் பேஷ்வாக்களை தங்கள் பிரதம அமைச்சராகவும் ஏற்றுக் கொண்டனர்.
பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியுடன் மோதல்கள்
[தொகு]மூன்று ஆங்கிலேய-மராட்டியப் போர்களிலும் (1775–1782, 1803–1805, 1817–1818), கெயிக்வாட் வம்ச மன்னர்கள், மராத்திய கூட்டமைப்புக்கு ஆதரவாக, கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகளுக்கு எதிராகப் போரிட்டனர். [5] போரின் முடிவில் மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களின் துணைப் படைத் திட்டத்தை ஏற்ற கெயிக்வாட் வம்சத்தின் பரோடா இராச்சியம், 1818 முதல் கிழக்கிந்திய கம்பெனிக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக விளங்கியது.
1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1947ல் கெயிக்வாட் மன்னர்கள் ஆண்ட பரோடா அரசு இந்தியாவுடன் இணைந்தது.
பரோடாவின் கெயிக்வாட் வம்ச மன்னர்கள்
[தொகு]- பாலாஜிராவ் கெயிக்வாட் (1721–1732)
- தாமோஜி ராவ் கெயிக்வாட் (1732–1768)
- முதலாம் சாயாஜிராவ் கெயிக்வாட் (1768–1778)
- பதேசிங்ராவ் கெயிக்வாட் (1778–1789)
- மனாஜிராவ் கெயிக்வாட் (1789–1793)
- கோவிந்தராவ் கெயிக்வாட் (1793–1800)
- ஆனந்தராவ் கெயிக்வாட் (1800–1818)
- இரண்டாம் சாயாஜிராவ் கெயிக்வாட் (1818–1847)
- கணபதிராவ் கெயிக்வாட் (1847–1856)
- காந்தராவ் கெயிக்வாட் (1856–1870)
- மால்கர்ராவ கெயிக்வாட் (1870–1875)
- மூன்றாம் சாயாஜிராவ் கெயிக்வாட் (1875–1939)
- பிரதாப்சிங் ராவ் கெயிக்வாட் (1939–1951)
- இரண்டாம் பாதேசிங் ராவ் கெயிக்வாட் (1951–1988)
- இரஞ்சித்சிங் பிரதாப்சிங் கெயிக்வாட் (1988–2012)
- சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெயிக்வாட் (2012–)
இதனையும் காண்க
[தொகு]- மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்
- பரோடா இராச்சியம்
- போன்சலே வம்சத்தின் நாக்பூர் இராச்சியம்
- ஹோல்கர் வம்சத்தின் இந்தூர் இராச்சியம்
- சிந்தியா வம்சத்தின் குவாலியர் இராச்சியம்
- பேஷ்வா
- துணைப்படைத் திட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gandhinagar: Building National Identity in Postcolonial India
- ↑ Streefkerk, Hein (1985). Industrial Transition in Rural India: Artisans, Traders, and Tribals in South Gujarat. Popular Prakashan. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780861320677.
- ↑ Gaekwar dynasty
- ↑ "India Has Rich State In Baroda". Hartford Courant. 16 August 1927 இம் மூலத்தில் இருந்து 4 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104084919/http://pqasb.pqarchiver.com/courant/access/808132672.html?dids=808132672:808132672&FMT=ABS&FMTS=ABS:AI&type=historic&date=Aug+16,+1927&author=&pub=Hartford+Courant&desc=India+Has+Rich+State+In+Baroda&pqatl=google.
- ↑ Maratha Wars
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Website of the Gaekwads of Baroda பரணிடப்பட்டது 2017-05-23 at the வந்தவழி இயந்திரம்