ஜுனாகத் குடைவரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கப்ரா கொடியா குடைவரைகளின் கட்டுமான வரைபடம்

ஜுனாகத் குகைகள் (Junagadh Buddhist Cave Groups), இந்திய மாநிலமான குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ளது.

இந்த மூன்று குகைகளின் தொகுப்பு, உண்மையில் மலையை குடைந்து அமைக்கப்பட்டதல்ல. இம்மூன்று தனித்தனியான குடைவரைகள், பௌத்த பிக்குகள் தங்குவதற்காக மணற்கல்லில் செதுக்கி அமைக்கப்பட்டதாகும். இக்குடைவரைகள், மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் கிமு 3 முதல் கிமு 4ம் நூற்றாண்டு முடிய அமைக்கப்பட்டதாகும்.

கப்ரா கொடியா குடைவரைகள்[தொகு]

கப்ரா கொடியா குடைவரைகளின் குறிப்புகளின் படி, இக்குடைவரைகள் கிமு 3 -4ம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. கப்ரா கொடியா குடைவரைகள், அனைத்து பௌத்த குடைவரைகளை விட மிகவும் சிறப்புற்றதாகும். [1] இவைகளை கங்கர் மகால் என்றும் அழைப்பர்.[2]

பவ பியாரா குடைவரைகள்[தொகு]

பவா பியாரே குடைவரைகளின் கட்டுமான வரைபடம்

இக்குடைவரைகள் சாதவாகனர் ஆட்சிக் காலத்தில் கிபி 1 முதல் 2ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.[1] [2] இதன் வடக்கில் நான்கு குடைவரைகளும், தென்கிழக்கில் சைத்தியம் மற்றும் பரந்த தாழ்வாரம் கொண்டுள்ளது.[1] பவா பியாரே பௌத்த நினைவுச் சின்னஙகள் 150 அடி நீளம் கொண்ட மூன்று தளங்களில் அமைந்த 13 குடைவரைகளின் தொகுப்பாகும். [3] பவா பியாரே குடைவரைகள் பௌத்தம் மற்றும் சமண சமயங்களின் கலை வேலைப்பாடுகளுடன் உள்ளது.

உபர்கோட் குடைவரைகள்[தொகு]

உபர்கோட் குடைவரைகளின் கட்டுமான வரைபடம்; கீழ் தளம் (இடது) மற்றும் மேல்தளம் (வலது)
உபர்கோட் குடைவரையின் மேல் தளம்

உபர்கோட் குடைவரைகள் கிபி 2 - 3ம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்டதாகும். இவைகள் சாதவாகனர்களின் ஆட்சிக் காலத்தில் கிரேக்க - சிதிய கட்டிடக் கலவையுடன் கட்டப்பட்டதாகும். மூன்று தளங்களுடன் கூடியது.[1] இக்குடைவரைகள் அழகிய தூண்கள் கொண்டது. மேலும் சன்னல்களுடன் கூடிய விகாரையும், பிக்குகள் தங்கித் தியானம் செய்வதற்கான சிறு சிறு அறைகளுடன் கூடியது. [4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Ticketed Monuments - Gujarat Buddhist Cave Groups, Uperkot, Junagadh". Archaeological Survey of India, Government of India. பார்த்த நாள் 25 November 2013.
  2. 2.0 2.1 Sagar, Krishna Chandra (1992). Foreign influence on ancient India. New Delhi: Northern Book Centre. பக். 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8172110286. https://books.google.com/books?id=0UA4rkm9MgkC&pg=PA150&lpg=PA150&dq=uparkot+caves&source=bl&ots=3bHBUPQlge&sig=oFpk-17KlH5GxSa6fDhQLM3XUXg&hl=en&sa=X&ei=DuuSUrLVD4yGrQeVxoDYAg&ved=0CDcQ6AEwAzgU#v=onepage&q=uparkot%20caves&f=false. பார்த்த நாள்: 25 November 2013. 
  3. "Buddhist Caves". Gujarat Tourism - Tourism Corporation of Gujarat Limited. மூல முகவரியிலிருந்து 12 December 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 November 2013.
  4. "Uparkot". Gujarat Tourism - Tourism Corporation of Gujarat Limited.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுனாகத்_குடைவரைகள்&oldid=2644820" இருந்து மீள்விக்கப்பட்டது