பாஜா குகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாஜா குகையின் அகலப்பரப்புக் காட்சி
நடனமாடும் மற்றும் மிருதங்கம் இசைக்கும் பெண்களின் சிற்பம்

பாஜா குகைகள் அல்லது பஜே குகைகள் (Bhaja Caves or Bhaje caves) (மராத்தி: भाजे) இருபத்தி இரண்டு குகைகளின் தொகுப்பாகும்.[1] கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடைவரை குகைகள், மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணாவாலா அருகில் பாஜா கிராமத்தில் நானூறு அடி உயரத்தில் உள்ளது.[2][3] மல்வலி தொடருந்து நிலையம், பாஜே கிராமத்தின் அருகில் உள்ளது.[4] இதனருகே கர்லா குகைகள் மற்றும் பேட்சே குகைகள் உள்ளது.

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்குகைகளை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது.[5][6][7]

ஈனயானம் பௌத்தப் பிரிவினருக்கு உரிய இக்குகைள்,[1] 14 தூபிகள் கொண்டுள்ளது.[2][8][9] இத்தூபிகளில் சிலவற்றில் அம்பினிகா , தம்மகிரி மற்றும் சங்கதினா போன்ற பிக்குகள் மற்றும் பிக்குணிகள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற குகை எண் 12ல் உள்ள சைத்தியத்தில் [10], மரவேலைப்பாடுகளுடன், லாட வடிவ மேற்கூரை கொண்டுள்ளது. குகை எண் 28ல் உள்ள புத்த விகாரத்தின் முற்றவெளியில் அழகிய தூண்களைக் கொண்டுள்ளது.[8] இக்குகைகள் அழகிய மரவேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்றதாகும்.[1] இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிருதங்கம் இசைக்கும் மரச்சிற்பங்கள் மற்றும் நடனமாடும் மங்கைகையர்களின் சிற்பங்கள் கொண்டுள்ளது.

இக்குகைகளின் சிற்பங்கள், தலை அலங்காரம், மாலைகள் மற்றும் நகை வேலைபாடுகளுடன் கூடியது.[11]

குகை எண் 29ல் உள்ள விகாரையில் தேரோட்டும் சூரியன், யானைச் சவாரி செய்யும் இந்திரன் மற்றும் நுழைவு வாயில்களில் துவாரபாலகர்களின் சிற்பங்கள் கொண்டுள்ளது.[12]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Ticketed Monuments - Maharashtra Bhaja Caves, Bhaja". Archaeological Survey of India, Government of India. 10 ஆகஸ்ட் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 July 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
 2. 2.0 2.1 Burgess, James (1880). "The caves in vicinity os Karle and the Bor Ghat". The Cave Temples of India. W.H. Allen. பக். 223–228. https://books.google.com/books?id=-HgTAAAAYAAJ&printsec=frontcover&dq=bhaja+caves&hl=en&sa=X&ei=1-PWUfWkHoOYrAflz4HYBQ&ved=0CGUQ6AEwCTgK#v=onepage&q=bhaja%20&f=false. பார்த்த நாள்: 5 July 2013. 
 3. "CHAPTER 20 PLACES OF INTEREST". Maharashtra Government - Tourism and Cultural Dept. 6 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
 4. Malavli Railway Station
 5. "Ticketed Monuments - Maharashtra Bhaja Caves, Bhaja". 2013-08-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
 6. "List of the protected monuments of Mumbai Circle district-wise" (PDF). 2016-09-10 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-08-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
 7. "Bhaja Caves Visitors' Sign". 2012-10-08 அன்று பார்க்கப்பட்டது.
 8. 8.0 8.1 Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India: history, art, and architecture (1. ). Delhi: Sri Satguru Publ.. பக். 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170307740. 
 9. Schopen, Gregory (1996). Bones, stones and Buddhist monks : collected papers on the archaeology, epigraphy, and texts of monastic Buddhism in India.. Honolulu: University of Hawaii Press. பக். 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0824818709. https://books.google.com/books?id=rxdZ-BVNm_IC&pg=PA200&dq=bhaja+caves&hl=en&sa=X&ei=FC7XUf6tKsPTrQe654CICw&ved=0CEoQ6AEwBDge#v=onepage&q=bhaja%20caves&f=false. 
 10. "5000 Years of Indian Architecture". 14 April 2007 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2007-03-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
 11. Behl, Benoy K (Sep 22 – Oct 5, 2007). "Grandeur in caves". Frontline 24 (19). http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl2419/stories/20071005505506600.htm. பார்த்த நாள்: 6 July 2013. 
 12. Knapp, Stephen (2009). "Karla and Bhaja Caves". Spiritual India handbook : a guide to temples, holy sites[,] festivals and traditions. Mumbai: Jaico Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8184950241. https://books.google.com/books?id=djI5mL2qeocC&pg=PT568&dq=bhaja+caves&hl=en&sa=X&ei=1-PWUfWkHoOYrAflz4HYBQ&ved=0CEsQ6AEwBDgK. பார்த்த நாள்: 6 July 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஜா_குகைகள்&oldid=3500007" இருந்து மீள்விக்கப்பட்டது