பவனா ஆறு

ஆள்கூறுகள்: 18°34′N 73°50′E / 18.567°N 73.833°E / 18.567; 73.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவனா ஆறு
பவனா ஆறு
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுமேற்கு தொடர்ச்சி மலைகள்
 ⁃ ஏற்றம்650 m (2,130 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
முளா ஆறு
நீளம்58 km (36 mi)

பவனா ஆறு (Pavana River) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள புனே மற்றும் பிம்பிரி-சிஞ்ச்வடு நகரகளில் பாயும் ஆறு ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் 650 மீட்டர் (2,130 அடி) உயரத்தில் அமைந்த லோணாவ்ளா பகுதியின் தெற்கில் உற்பத்தியாகும் பவானா ஆறு, கிழக்கில 56 கிலோ மீட்டர் பாய்ந்த பின்னர் புனே நகரத்தின் பகுதியான சாங்கவி அருகே மூளா ஆற்றுடன் கலக்கிறது. இந்த ஆறு மூளா ஆற்றுடன் கலக்கும் முன்னர் சிஞ்ச்வடு, பிம்பிரி, கசர்வடி, பிம்பிளே குரவ், சாங்கவி, புனே நகரங்களில் வழியாக பாய்கிறது.

இந்த ஆற்றின் நீரை தேக்கி வைப்பதற்கான பவனா நீர்த்தேக்கம் 1972-இல் கட்டப்பட்டது. பவனா நீர்த்தேக்கம் 1,329 m (4,360 அடி) நீளமும், 42.37 m (139.0 அடி) உயரமும் மற்றும் 0.24 km3 (0.058 cu mi) கொள்ளளவும் கொண்டது.[1]

இந்த ஆறு அதிக மக்கள்தொகை கொண்ட நகரப் பகுதிகளில் பாய்வதால் அதிக மாசு கொண்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Central Water Commission. "Specifications of large dams in India" (PDF). Central Water Commission. Archived from the original (PDF) on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 4 May 2014.
  2. Express News Service (18 July 2013). "Pavana river is highly polluted: PCMC report". The Indian Express. http://archive.indianexpress.com/news/pavana-river-is-highly-polluted-pcmc-report/1143371/. பார்த்த நாள்: 4 May 2014. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=பவனா_ஆறு&oldid=3760314" இலிருந்து மீள்விக்கப்பட்டது