இந்தாப்பூர் தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தப்பூர் தாலுகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இந்தாப்பூர் தாலுகா
தாலுக்கா
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் இந்தாப்பூர் தாலுக்காவின் அமைவிடம்
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் இந்தாப்பூர் தாலுக்காவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°07′12″N 75°01′48″E / 18.1200°N 75.0300°E / 18.1200; 75.0300
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மண்டலம்புணே மண்டலம்
மாவட்டம்புனே மாவட்டம்
துணை கோட்டம்பாராமதி துணை கோட்டம்
தலைமையிடம்இந்தாப்பூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்383,183
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

இந்தாப்பூர் தாலுகா (Indapur taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தின் 15 தாலுக்காக்களில் ஒன்றாகும். புனே மாவட்டத்தின் தென்கிழக்கு கோடியில் அமைந்த இந்தாப்பூர் தாலுகா பாராமதி துணைக் கோட்டத்தில் உள்ளது.[1] இத்தாலுக்காவின் நிர்வாகத் தலைமையிடம் இந்தாப்பூர் நகரம் ஆகும். இவ்வருவாய் வட்டம் இந்தாப்பூர் நகராட்சியும், 142 வருவாய் கிராமகளும் கொண்டது.[2] இந்தப்பூர் வட்டத்தின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தாப்பூர் வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 3,83,183 ஆகும். அதில் ஆண்கள் 198,801 மற்றும் 1,84,382 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 927 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 45787 (12%) உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.53% ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 61,080 மற்றும் 4,766 ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 3,55,705 (92.83%), இசுலாமியர் 18,637 (4.86%), பௌத்தர்கள் 4,763 (1.24%), சமணர்கள் 2,413 (0.63%), கிறித்தவர்கள் 300 (0.08%) மற்றும் பிறர் 0.36 ஆகவுள்ளனர்.[3] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர். இந்த வருவாய் வட்டத்தில் நகர்புறத்தில் 6.7% மக்களும், கிராமபுறங்களில் 93.3% மக்களும் வாழ்கின்றனர்.

வணிகம்-பொருளாதாரம்[தொகு]

இந்தாபூர் தாலுகாவில் புனே, இந்தாப்பூர் ஆகியவற்றின் வேளாண் விளைச்சல், சந்தைக் குழுக்கள் இணைந்து வேளாண் விளைபொருள் ஏற்றுமதி வசதி மையத்தை இயக்கி வருகின்றன. இந்த வசதியிலிருந்து வாழைப்பழங்கள், மாதுளை, திராட்சை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த தாலுகாவில் மாதுளை, திராட்சை, மிளகாய், தக்காளி ஆகிய பிற பயிர்கள் பயிரிடப்படுகின்றன[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தாப்பூர்_தாலுகா&oldid=3494161" இருந்து மீள்விக்கப்பட்டது