முடா ஆறு
Appearance
முடா ஆறு(மராத்தி:मुठा English:Mutha) மேற்கு மகாராட்டிரத்தில் ஓடும் ஒரு ஆறுயாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி கிழக்கு நோக்கிப் பாய்ந்து புனே நகரில் முளா ஆற்றோடு இணைகிறது. இந்த ஆற்றின் மீது பான்ஷெத் அணையும் கடக்வாஸ்லா அணை யும் கட்டப்பட்டு வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. புனேவில் இந்த ஆறு, புனே நகரத்தில் பாயும் முளா ஆற்றுடன் கலந்து முளா-முடா ஆறு என்ற பெயருடன் பீமா ஆற்றுடன் இணைகிறது. 2000இல் டேம்கர் அணையும் இதன் மீது கட்டப்பட்டுள்ளது.
முடா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்கள்.
[தொகு]- வார்ஜே பாலம் (கட்ராஜ் -தேஹு புறவழிச்சாலை)
- சத்ரபதி ராஜாராம் பாலம்
- மத்ரே பாலம்
- எஸ்.எம். ஜோஷி பாலம்
- யெஸ்வந்திராவ் சவான் பாலம்
- சாம்பாஜி பாலம்
- ஜீ பாலம்
- பிடே பாலம்
- ஷிண்டே பாலம்
- ஜெயந்த்ராவ் திலக் பாலம்
- டெங்கட் பாலம்
- இரயிவே சங்கம் பாலம்
- சங்கம் பாலம்