ஜுன்னர் தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜுன்னர் தாலுகா
ஜுன்னர்
தாலுகா
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் ஜுன்னர் தாலுகாவின் அமைவிடம்
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் ஜுன்னர் தாலுகாவின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே மாவட்டம்
தலைமையிடம்ஜுன்னர்
வருவாய் கிராமங்கள்
அரசு
 • மக்களவைத் தொகுதிசிரூர்
 • சட்டமன்றத் தொகுதிஜுன்னர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,99,302
Demographics
 • எழுத்தறிவு83.8%.
 • பாலின விகிதம்1000:973
ஆண்டு சராசரி மழைப்பொழிவு200 மிமீ முதல் 550 மிமீ வரை
இணையதளம்Junnar Tourism

ஜுன்னர் தாலுகா (Junnar taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் 14 தாலுக்காக்களில் ஒன்றாகும். புனே மாவட்டத்தின் வடமேற்கில் அமைந்த ஜுன்னர் தாலுகாவை ஒட்டி தானே மாவட்டம் மற்றும் அகமது நகர் மாவட்டம் உள்ளது. ஒட்டியுள்ளது.

இத்தாலுகா ஜுன்னர் நகராட்சி மற்றும் 181 வருவாய் கிராமங்கள் கொண்டது.[1]

ஜுன்னர் நகரம் மும்பையிலிருந்து 100 கி.மீ கிழக்கிலும், புனேவிற்கு வடக்கில் 94 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்[தொகு]

ஜுன்னர் அருகே சிவனேரி கோட்டை மற்றும் நானாகாட், மன்மோடி குகைகள், துளஜா குகைகள், லென்யாத்திரி குகைகள் போன்ற பௌத்த குடைவரைக் கோயில்களும் உள்ளது. இத்தாலுகாவில் 5 சிறிய நீர்த்தேக்கங்கள் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜுன்னர் தாலுகாவின் மொத்த மக்கள்தொகை 3,99,302ஆகும். அதில் ஆண்கள் 202,360 மற்றும் 196,942 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 973 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆக 42941 (11%) உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.8% ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 17,922 மற்றும் 80,922 ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 364,023 (91.16%), இசுலாமியர் 24,702 (6.19%), பௌத்தர்கள் 7,245 (1.81%), சமணர்கள் 2,212 (0.55%) மற்றும் பிறர் 0.28% ஆகவுள்ளனர்.[2] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுன்னர்_தாலுகா&oldid=3494263" இருந்து மீள்விக்கப்பட்டது