பிம்பளே குரவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிம்பிளே குரவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிம்பளே குரவ்
பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியின் பகுதி
பிம்பளே குரவ் is located in இந்தியா
பிம்பளே குரவ்
பிம்பளே குரவ்
மகாராட்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ள பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகரத்தில் பிம்பளே குரவ் பகுதின் அமைவிடம்
பிம்பளே குரவ் is located in மகாராட்டிரம்
பிம்பளே குரவ்
பிம்பளே குரவ்
பிம்பளே குரவ் (மகாராட்டிரம்)
ஆள்கூறுகள்: 18°35′27″N 73°49′00″E / 18.5907721°N 73.8167953°E / 18.5907721; 73.8167953ஆள்கூறுகள்: 18°35′27″N 73°49′00″E / 18.5907721°N 73.8167953°E / 18.5907721; 73.8167953
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே மாவட்டம்
மக்கள்தொகை (2018)
 • மொத்தம்1,00,000
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்411061
வாகனப் பதிவுMH14

பிம்பளே குரவ் (Pimple Gurav) (மராத்தி:पिंपळे गुरव) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டம், ஹவேலி தாலுகாவில் உள்ள பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இது பழைய புனே-மும்பை சாலையில் அமைந்துள்ளது. இது புனே மாநகராட்சியின் சுற்றுப் பகுதியில் உள்ளது. முன்னர் பிம்பிளே குரவ் கிராமப்புறமாக இருந்தது. 1982-இல் பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி நிறுவும் போது, அதன் வடமேற்கு பகுதியில் பிம்பிளே குரவ் பகுதி உள்ளது. பிம்பிளே குரவ் பகுதிக்கு வடக்கில் கசர்வடி தொடருந்து நிலையம் உள்ளது. மேலும் இப்பகுதியில் பவனா ஆறு பாய்கிறது.

அமைவிடம்[தொகு]

பிம்பிளே குரவ் பகுதியின் வடக்கில் கசர்வடி, தெற்கில் சாங்கவி, மேற்கில் பிம்பளே சௌதாகர், தென்மேற்கில் பிம்பளே நிலாக் போன்ற நகரப்பகுதிகள் உள்ளது. பிம்பிளே குரவ்வுக்கு மேற்கில் பவனா ஆறு பாய்கிறது. இது பழைய புனே-மும்பை சாலையில் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

இந்நகரத்தின் வடக்குப் பகுதியில், ஆறு வழித்தடங்கள் கொண்ட மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை செல்கிறது. இதன் வடக்கில் உள்ள கசர்வடி பகுதியிலிருந்து நாசிக் வழியாக புனே-துலே நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 60 செல்கிறது.[1]

இங்குள்ள பேருந்து நிலையத்திலிருந்து புனே தொடருந்து நிலையம், நிக்டி, தாபோடி, ஆகுர்டி, ஹிஞ்சவடி, போசரி, பிம்பிரி, சிஞ்ச்வடு, சிவாஜி நகர், ஆகுர்டி தொடருந்து நிலையம், காத்ரஜ், புனே மாநகராட்சி போன்ற பகுதிகளுக்கு அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அருகமைந்த உள்ளூர் தொடருந்து நிலையம், சென்னை-மும்பை இருப்புப் பாதையில் அமைந்த கசர்வடியில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "PCMC BRTS route aims to ease traffic congestion". 2013-02-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-08-15 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிம்பளே_குரவ்&oldid=3563384" இருந்து மீள்விக்கப்பட்டது