சிரூர் தாலுகா
சிரூர் தாலுகா | |
---|---|
![]() மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் சிரூர் தாலுகாவின் அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே மாவட்டம் |
இணையதளம் | shirur.mytaluka.com |

சிரூர் தாலுகா (Shirur taluka) (மராத்தி: शिरूर तालुका), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் 14 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] சிரூர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரம் சிரூர் நகராட்சி ஆகும்.
இத்தாலுகா சிரூர் நகராட்சி, கோரேகான் பீமா, சனஸ்வடி எனும் இரு சிற்றூர்களும், 115 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[2]
இத்தாலுகாவில் ரஞ்சன்கோண் கணபதி கோயில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தாலுகாவின் மொத்த மக்கள்தொகை 3,85,414 ஆகும். அதில் ஆண்கள் 201,152 மற்றும் 184,262 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 916. பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 47921 (12%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.37%. ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 32,885 மற்றும் 12,030 ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 359,402 (93.25%), இசுலாமியர் 13,143 (3.41%), பௌத்தர்கள் 7,758 (2.01%), சமணர்கள் 3,631 (0.94%), கிறித்தவர்கள் 581 (0.15%) மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[3] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "cOllectorate pune District - In General Climate Of Pune District". Archived from the original on 29 ஏப்ரல் 2015. Retrieved 30 April 2015.
- ↑ Shirur Taluka - Pune
- ↑ Shirur Taluka Population, Caste, Religion Data - Pune district