பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் (Scheduled Castes & Scheduled Tribes)[2] என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் (Depressed Class) என்று வகைப்படுத்தி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு பஞ்சமி நிலங்கள் ஒதுக்கப்பட்டன.
மகாத்மா காந்தியும், அவர்பால் ஈர்க்கப்பட்ட என். எம். ஆர். சுப்பராமன் போன்றவர்கள், நாடு முமுவதும் அரிசன சேவை சங்கம் என்ற அமைப்பை நிறுவி, ஹரிசனங்களின் கல்வி மற்றும் சமூகத் தரம் மேம்பட உண்டு உறைவிடப்பள்ளிகள் மற்றும் கோயிலில் நுழைவுப் போராட்டங்கள் நடத்தினர்.
பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்களை இந்திய அரசியலமைப்பு அங்கீகரித்துள்ளது.[3]
இந்திய அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை, ஆண்டு 1950இன் படி, இந்தியாவில் 1,108 பட்டியல் சாதிகளையும்,[4] 744 பட்டியல் பழங்குடியினங்களையும் அடையாளம் கண்டுள்ளது.[5]
கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு
[தொகு]பட்டியல் மக்கட்தொகைக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும் பட்டியல் சாதி மக்களுக்கு 15% இட ஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடும் வழங்கியுள்ளது.[6][7]
சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு
[தொகு]பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் இந்திய அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்றத்திற்கு, பட்டியல் சாதியினர்க்கு 79 தொகுதிகளும், பட்டியல் பழங்குடியினர்க்கு 40 தேர்தல் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.[8] மேலும் இந்திய மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு போதிய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.[9]
பட்டியல் மக்கள் நலன் மேம்படுத்த அரசின் நடவடிக்கைகள்
[தொகு]பட்டியல் சாதி மக்கள், பட்டியல் பழங்குடி மக்களின் நலன் காக்க இந்திய அரசியலமைப்பு மூன்று உத்திகளை இந்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வலியுறுத்துகிறது.[10] அவைகள்:
- பாதுகாப்பு: தீண்டாமை ஒழிப்பு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்ற சட்ட நடவடிக்கைகள் மூலம் பட்டியல் மக்கள் நாட்டில் சமத்துவத்துடன், பாதுகாப்புடன், மரியாதையுடன் வாழ வகை செய்ய வேண்டும்.
- இடஒதுக்கீடு: உள்ளாட்சி அமைப்புகள், மத்திய மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டை சட்டப்படி கடைப்பிடிக்கின்றனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- மேம்பாடு: வளங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கி, சமூக, பொருளாதாரத்தில் பட்டியல் மக்களுக்கும், பிற மக்களுக்கும் இடையே நட்பு பாலமாக விளங்க வகை செய்ய வேண்டும்.[11]
தேசிய ஆணைக் குழுக்கள்
[தொகு]பட்டியல் மக்களின் நலன் காத்திட இந்திய அரசு, அரசியல் அமைப்பு சட்டப்படி இரண்டு சட்டபூர்வமான ஆணையங்கள் ஏற்படுத்தியுள்ளது.
- பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்[12]
- பட்டியல் பழங்குடியினர்களுக்கான தேசிய ஆணையம் [13]
பட்டியல் மக்களின் மனித உரிமைகளை காத்திட, இவ்விரு ஆணையத்தின் தலைவர்கள், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிமுறை உறுப்பினர்களாக செயல்படுகின்றனர்.
பட்டியல் மக்களுக்கான அரசுத்துறைகள்
[தொகு]- பட்டியல் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக இந்திய அரசு தனி அமைச்சகம் அமைத்துள்ளது.[14]
- பட்டியல் சாதி மக்களின் மேம்பாட்டிற்காக இந்திய அரசு தனி அமைச்சகம் அமைத்துள்ளது.[15][16]
- அனைத்து மாநில அரசுகளும் பட்டியல் சாதிகள் & பட்டியல் பழங்குடியினர் நலத்துறைகள்.[17]
சமய வாரியாக பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மக்கட்தொகை
[தொகு]இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1990இன் படி, (Constitution (Scheduled Castes) Orders (Amendment) Act, 1990) பட்டியல் சாதியினர் இந்து, சீக்கியம், அல்லது பௌத்த சமயத்தை மட்டும் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.[18][19] பட்டியல் பழங்குடியினர்கள் எச்சமயத்தையும் சார்ந்தவராகவும் இருக்கலாம்.[20][21] 61வது சுற்று தேசிய புள்ளியியல் சர்வே அறிக்கையின்படி, இந்தியாவில் பௌத்த சமய மக்கட்தொகையில் 90%, சீக்கிய சமய மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கும், கிறித்தவ மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பட்டியல் பழங்குடியினர் உள்ளனர்.[22][23]
சமயத்தவர் | பட்டியல் சாதியினர் (SC) | பட்டியல் பழங்குடியினர் (ST) | இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) | மற்றவர்கள் | மொத்தம் |
---|---|---|---|---|---|
இந்து | 22.2 | 9 | 42.8 | 26.0 | 100 |
முஸ்லீம் | 0.8 | 0.5 | 39.2 | 59.5 | 100 |
கிறித்தவர் | 9.0 | 32.8 | 24.8 | 33.3 | 100 |
சீக்கியர் | 30.7 | 0.9 | 22.4 | 46.1 | 100 |
சமணர் | 0.0 | 2.6 | 3.0 | 94.3 | 100 |
பௌத்தர் | 89.5 | 7.4 | 0.4 | 2.7 | 100 |
பார்சி | 0.0 | 15.9 | 13.7 | 70.4 | 100 |
பிறர் | 2.6 | 82.5 | 6.2 | 8.7 | 100 |
தமிழ்நாட்டு பட்டியல் சாதிகள்
[தொகு]பட்டியலிடப்பட்ட சாதிகள்
[தொகு]- ஆதி ஆந்திரர்
- ஆதி திராவிடர்
- ஆதி கர்நாடகர்
- அஜிலா
- அருந்ததியர்
- ஐயனார் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- பைரா
- பகூடா
- பண்டி
- பெல்லாரா
- பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- சக்கிலியன்
- சாலாவாடி
- சாமார், மூச்சி
- சண்டாளா
- செருமான்
- தேவேந்திர குலத்தான்
- டோம், தொம்பரா, பைதி, பானே
- தொம்பன்
- கொடகலி
- கொட்டா
- கோசாங்கி
- ஹொலையா
- ஜக்கலி
- ஜம்புவுலு
- கடையன்
- கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- கல்லாடி
- கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
- கரிம்பாலன்
- கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- கோலியன்
- கூசா
- கோத்தன், கோடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- குடும்பன்
- குறவன், சித்தனார்
- மடாரி
- மாதிகா
- மைலா
- மாலா
- மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- மாவிலன்
- மோகர்
- முண்டலா
- நலகேயா
- நாயாடி
- பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- பகடை
- பள்ளன்
- பள்ளுவன்
- பம்பாடா
- பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- பஞ்சமா
- பன்னாடி
- பன்னியாண்டி
- பறையர், பரையன், சாம்பவர்
- பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- புலையன், சேரமார்
- புதிரை வண்ணான்
- ராணேயர்
- சாமாகாரா
- சாம்பான்
- சபரி
- செம்மான்
- தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- தோட்டி
- திருவள்ளுவர்
- வல்லோன்
- வள்ளுவன்
- வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- வாதிரியான்
- வேலன்
- வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- வெட்டியான்
- வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
தமிழ்நாட்டு பட்டியல் பழங்குடிகள்
[தொகு]- அடியன்
- அரநாடன்
- எரவள்ளன்
- இருளர்
- காடர்
- கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
- காணிக்காரர், காணிக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்)
- கணியன், கண்யான்
- காட்டு நாயகன்
- கொச்சுவேலன்
- கொண்டக்காப்பு
- கொண்டாரெட்டி
- கொரகா
- கோட்டா (கன்னியாகுமரி மாவட்டமும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
- குடியா, மேலக்குடி
- குறிச்சன்
- குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
- குறுமன்
- மகாமலசார்
- மலை அரையன்
- மலைப் பண்டாரம்
- மலை வேடன்
- மலைக்குறவன்
- மலைசர்
- மலையாளி (தருமபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)
- மலையக்கண்டி
- மன்னான்
- மூடுகர், மூடுவன்
- முத்துவன்
- பழையன்
- பழியன்
- பழியர்
- பணியர்
- சோளகா
- தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
- ஊராளி
இதனையும் காண்க
[தொகு]- இந்தியாவின் பட்டியலிடப்பட்ட பழங்குடிகள்
- தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம்
- பஞ்சமி நிலம்
- ஆலய பிரவேச சட்டம்
- இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
- பிற்படுத்தப்பட்டோர்
- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு
- சீர்மரபினர்
- இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் – தமிழ்நாடு
- தமிழக சாதிகள் பட்டியல்
- பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்
- முன்னேறிய வகுப்பினர்
- ஜம்மு காஷ்மீரில் இட ஒதுக்கீடு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Census of India 2011, Primary Census Abstractவார்ப்புரு:PPTlink, Scheduled castes and scheduled tribes, Office of the Registrar General & Census Commissioner, Government of India (October 28, 2013).
- ↑ "Scheduled Caste Welfare – List of Scheduled Castes". Ministry of Social Justice and Empowerment. Archived from the original on 13 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 16 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Kumar (1992), The affirmative action debate in India, Asian Survey, Vol. 32, No. 3, pp. 290–302
- ↑ "Text of the Constitution (Scheduled Castes) Order, 1950, as amended". Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2015-08-16.
- ↑ "Text of the Constitution (Scheduled Tribes) Order, 1950, as amended". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2015-08-16.
- ↑ 2011 Census Primary Census Abstract
- ↑ "Half of India's dalit population lives in 4 states".
- ↑ http://www.parliamentofindia.nic.in/lsdeb/ls13/ses1/1927109903.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2015-08-16.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-05-08. பார்க்கப்பட்ட நாள் 2015-08-16.
- ↑ http://cms.tn.gov.in/sites/default/files/gos/adtw_t_68_2015_1D.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "National Commission for Schedule Castes".
- ↑ "THE CONSTITUTION (EIGHTY-NINTH AMENDMENT) ACT, 2003".
- ↑ "Ministry of Tribal Affairs". Archived from the original on 2015-08-26. பார்க்கப்பட்ட நாள் 2015-08-16.
- ↑ Scheduled Caste Welfare Division of Ministry of Social Justice and Empowerment[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Scheduled Caste Welfare - Schemes and Programs
- ↑ Adi Dravidar and Tribal Welfare Department
- ↑ "Frequently Asked Questions – Scheduled Caste Welfare: Ministry of Social Justice and Empowerment, Government of India". socialjustice.nic.in. Archived from the original on 2015-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-08-16.
- ↑ "Definition". tribal.nic.in.
- ↑ Scheduled Castes and Scheduled Tribes Introduction
- ↑ Sachar Committee Questions and Answer
- ↑ Sachar, Rajindar (2006). "Sachar Committee Report (2004–2005)" (PDF). Government of India. Archived from the original (PDF) on 2014-04-02. பார்க்கப்பட்ட நாள் 2008-09-27.
- ↑ Sachar, Rajindar (2006). "Minority Report" (PDF). Government of India. Archived from the original (PDF) on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2008-09-27.
வெளி இணைப்புகள்
[தொகு]- தமிழ்நாட்டில் பட்டியல் சாதிகள் & பட்டியல் பழங்குடியினர் பட்டியல் பரணிடப்பட்டது 2015-12-06 at the வந்தவழி இயந்திரம்
- மாநிலவாரியாக பட்டியல் சாதிகள் & பட்டியல் பழங்குடி மக்கள்
- THE CONSTITUTION (SCHEDULED CASTES) ORDER, 1950
- State/Union Territory-wise list of Scheduled Tribes in India பரணிடப்பட்டது 2016-03-10 at the வந்தவழி இயந்திரம்
- THE CONSTITUTION (SCHEDULED CASTES) ORDERS (AMENDMENT) BILL, 2012[தொடர்பிழந்த இணைப்பு]
- Ministry of Tribal Affairs
- 2001 Census of India – Tables on Individual Scheduled Castes and Scheduled Tribes
- Dalit Indian Chamber of Commerce & Industry பரணிடப்பட்டது 2016-10-30 at the வந்தவழி இயந்திரம்
- Dalit and Adivasi Student Portal பரணிடப்பட்டது 2018-08-09 at the வந்தவழி இயந்திரம்
- Organization for SC & ST Govt Employees பரணிடப்பட்டது 2017-06-30 at the வந்தவழி இயந்திரம்
- Administrative Atlas of India – 2011
- தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 1 (தமிழில்)
- தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 2 (தமிழில்)
- தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 3 (தமிழில்)
- தமிழகத்தின் இட ஒதுக்கீடு முறை - காணொலி (தமிழில்)
- தமிழகத்தில் இடஒதுக்கீடு கடந்து வந்த பாதை - காணொலி (தமிழில்)
மேலும் படிக்க
[தொகு]- Srivastava, Vinay Kumar; Chaudhury, Sukant K. (2009). "Anthropological Studies of Indian Tribes". In Atal, Yogesh (ed.). Sociology and Social Anthropology in India. Indian Council of Social Science Research/Pearson Education India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131720349.