சார்க்கண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜார்கண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சார்க்கண்டு
மாநிலம்
மேலிருந்து கடிகார திசையில்: தஸ்ஸாம் அருவி, பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தாமோதர் ஆற்றில் பஞ்சேட் அணை , சமேத் ஷிகர்ஜி ஜெயின் மகாதீர்த், பைத்யநாத் கோயில், பட்ராடு நெடுஞ்சாலை மற்றும் தால்மா வனவிலங்கு சரணாலயம்

சின்னம்
சார்க்கண்டு வரைபடம்
சார்க்கண்டு வரைபடம்
நாடு இந்தியா
பகுதிகிழக்கு இந்தியா
நிறுவப்பட்ட நாள்15 நவம்பர் 2000
தலைநகரம்இராஞ்சி
மாவட்டங்கள்
அரசு
 • நிர்வாகம்ஜார்க்கண்டு அரசு
 • ஆளுநர்இரமேஷ் பைஸ்
 • முதலமைச்சர்ஹேமந்த் சோரன்
 • சட்டப் பேரவைஓரவை ஜார்க்கண்டின் சட்டமன்றம் ( 81 தொகுதிகள்)
 • நாடாளுமன்ற தொகுதிகள்
 • உயர் நீதிமன்றம்ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்79,716 km2 (30,779 sq mi)
பரப்பளவு தரவரிசை15வது
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்32,988,134
 • தரவரிசை14வது
 • அடர்த்தி410/km2 (1,100/sq mi)
இனங்கள்ஜார்கண்டி
GDP (2019–20)[2]
 • மொத்தம்3.83 டிரில்லியன் (US$48 பில்லியன்)
 • தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி79,873 (US$1,000)
மொழி
 • அலுவல்மொழி[3]இந்தி
 • கூடுதல் அலுவல்மொழி
நேர வலயம்இசீநே (ஒசநே+05:30)
தொலைபேசி+91
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-JH
வாகனப் பதிவுJH
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2018) 0.599 (medium) 34வது
படிப்பறிவு (2011)67.6% (31வது)
பாலின விகிதம் (2011)948 /1000 (18வது)
இணையதளம்www.jharkhand.gov.in
சின்னங்கள்
சின்னம்
சார்க்கண்டு அரசு சின்னம்
விலங்கு ஆசிய யானை[6]
பறவை ஆசியக் குயில்
மலர் புரசு[6]
மரம் குங்கிலியம்[6]
பீகார் மறுசீரமைப்பு சட்டம், 2000 மூலம் உருவாக்கப்பட்டது

ஜார்க்கண்டு (இந்தி: झारखण्ड, சந்தாளி மொழி:ᱡᱷᱟᱨᱠᱷᱚᱸᱰ, உருது: جھارکھنڈ) இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 2000ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு சார்க்கண்டுமாநிலம் உருவாக்கப் பட்டது. ராஞ்சி சார்க்கண்டு மாநிலத்தின் தலைநகராகும். ஜாம்ஷெட்பூர் (பெரிய நகரம்), பொகாரோ மற்ற முக்கிய நகரங்கள். சார்க்கண்டின் அருகில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. சார்க்கண்டுகனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்டு என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.

பொருளாதாரம்[தொகு]

சார்க்கண்டு மாநிலத்தின் முக்கிய பொருளாதார ஆதாரங்களாக இரும்பு, நிலக்கரி, அலுமினியம் போன்ற கனிமச் சுரங்கங்கள் அதிகமாக உள்ளது.

நிர்வாகம்[தொகு]

கோட்டங்களும்மாவட்டங்களும்

79,716 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சார்க்கண்டு மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பாலமூ கோட்டம், வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம், தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டம், கொல்கான் கோட்டம், சாந்தல் பர்கனா கோட்டம் என ஐந்து கோட்டங்களாக பிரிக்கப்பட்டு, மாநிலத்தின் இருபத்து நான்கு மாவட்டங்கள் கோட்டங்களின் பகுதியாக இயங்குகிறது.

பலாமூ கோட்டம்[தொகு]

பாலமூ கோட்டத்தில் காட்வா மாவட்டம். பலாமூ மாவட்டம், லாத்தேஹார் மாவட்டம் என மூன்று மாவட்டங்களை கொண்டது.

வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம்[தொகு]

வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டத்தில் சத்ரா மாவட்டம், ஹசாரிபாக் மாவட்டம், கிரீடீஹ் மாவட்டம், கோடர்மா மாவட்டம், தன்பாத் மாவட்டம், போகாரோ மாவட்டம் மற்றும் ராம்கர் மாவட்டம் என ஏழு மாவட்டங்களை கொண்டுள்ளது.

தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டம்[தொகு]

தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டத்தில் ராஞ்சி மாவட்டம், லோஹர்தக்கா மாவட்டம், கும்லா மாவட்டம், சிம்டேகா மாவட்டம், மேற்கு சிங்பூம் மாவட்டம், மற்றும் குந்தி மாவட்டம் என ஐந்து மாவட்டங்களை கொண்டுள்ளது.

கொல்கான் கோட்டம்[தொகு]

கொல்கான் கோட்டத்தில் மேற்கு சிங்பூம் மாவட்டம், சராய்கேலா கர்சாவான் மாவட்டம் மற்றும் கிழக்கு சிங்பூம் மாவட்டம் என மூன்று மாவட்டங்கள் உள்ளது.

சாந்தல் பர்கனா கோட்டம்[தொகு]

சாந்தல் பர்கனா கோட்டத்தில் தேவ்கர் மாவட்டம், ஜாம்தாடா மாவட்டம், தும்கா மாவட்டம், கோடா மாவட்டம், பாகுட் மாவட்டம், மற்றும் சாகிப்கஞ்சு மாவட்டம் என ஆறு மாவட்டங்கள் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

தரைவழி போக்குவரத்து[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 31, தேசிய நெடுஞ்சாலை 2, தேசிய நெடுஞ்சாலை 6, மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண்கள் 23, 32, 33, 75, 78, 80, 98, 99, 100 மற்றும் 139 ஆகியவைகள் நாட்டின் அனைத்து பகுதிகளுடன் தரைவழியாக இணைக்கிறது.

தொடருந்து[தொகு]

சார்க்கண்டு மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இணைக்கும் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[7]

வானூர்தி நிலையங்கள்[தொகு]

பிர்ச முண்டா பன்னாட்டு விமான நிலையம், ராஞ்சி[8], ஜம்செட்பூர் விமான நிலையம், தன்பாத் விமான நிலையம், சகுலியா விமான நிலையம், பொகாரோ விமான நிலையங்கள் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் வான் வழியாக இணைக்கிறது.[9]

மக்கள் வகைப்பாடு[தொகு]

மொத்த மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடி மக்கள் 28% ஆகவும், பட்டியல் சமூக மக்கள் 12% ஆகவும் உள்ளனர்.

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 32,988,134 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 32,988,134 மற்றும் பெண்கள் 16,930,315 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 948 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 414 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 66.41% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு76.8% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.42% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,389,495 ஆக உள்ளது. [10]

சமயம்[தொகு]

பழங்குடி இன மக்கள் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில், இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 22,376,051 (67.83%) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 4,793,994 (14.53%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 1,418,608 (4.30 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 71,422 (0.22%) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 14,974 (0.05 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 8,956 (0.03%) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 4,235,786 ( 12.84%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 68,343 (0.21%) ஆகவும் உள்ளது.

அரசியல்[தொகு]

சட்டமன்ற தொகுதிகள்

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

எண்பத்து ஒன்று சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட சார்க்கண்டு மாநிலத்தில், மொத்தமுள்ள எண்பத்து ஒன்று சட்டமன்ற தொகுதிகளில், பட்டியல் பழங்குடி மக்களுக்கு-ST 27 தொகுதிளும், பட்டியல் சமூகத்திற்கு 9 தொகுதிகளும், பொதுப்பிரிவினருக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.[11]

நாடாளுமன்ற தொகுதிகள்

நாடாளுமன்ற தொகுதிகள்[தொகு]

பதின்நான்கு மக்களவை தொகுதிகளில் பட்டியல் பழங்குடி மக்களுக்கு-ST 5 தொகுதிகளும், பட்டியல் சமூகத்திற்கு 1 தொகுதியும், பொதுப்பிரிவினருக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.[11]

மாநிலப் பிரச்சனைகள்[தொகு]

சார்க்கண்டு மாநிலம் நக்சலைட்-மாவோயிஸ்ட் போராளிகளின் சிவப்பு தாழ்வாரமாக உள்ளது. 1967ஆம் ஆண்டில் இப்பகுதியில் போராளிகளுக்கும்-மாநில காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 6,000 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.[12]

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

கசாரிபாக் தேசியப் பூங்கா மற்றும் டாட்டா ஸ்டீல் விலங்கு காட்சிச்சாலை ஆகும்.

மாநிலத்தின் புகழ் பெற்றவர்கள்[தொகு]

 1. மகேந்திரசிங் தோனி
 2. கரிய முண்டா
 3. சிபு சோரன்
 4. சுதர்சன் பகத்
 5. சுனில் குமார் சிங்
 6. ஜெயந்த் சின்ஹா
 7. நிசிகாந்த் துபே
 8. பசுபதி நாத் சிங்
 9. பித்யூத் பரன் மத்தோ
 10. மது கோடா
 11. ரகுபர் தாசு
 12. ரவீந்திர குமார் பாண்டே
 13. ரவீந்திர குமார் ராய்
 14. ராம் தகல் சவுத்ரி
 15. லட்சுமண் கிலுவா
 16. விஜய் குமார் ஹன்ஸ்தக்
 17. விஷ்ணு தயாள் ராம்
 18. ஹேமந்த் சோரன்

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Jharkhand Profile 2011 Census". Registrar General & Census Commissioner, India இம் மூலத்தில் இருந்து 22 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160422071627/http://censusindia.gov.in/2011census/censusinfodashboard/stock/profiles/en/IND020_Jharkhand.pdf. 
 2. "MOSPI Gross State Domestic Product". 1 March 2019 இம் மூலத்தில் இருந்து 17 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190617142647/http://mospi.nic.in/sites/default/files/press_releases_statements/State_Series_1mar19.xls. 
 3. "Report of the Commissioner for linguistic minorities: 52nd report (July 2014 to June 2015)". Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. pp. 43–44 இம் மூலத்தில் இருந்து 15 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161115133948/http://nclm.nic.in/shared/linkimages/NCLM52ndReport.pdf. 
 4. "Jharkhand gives second language status to Magahi, Angika, Bhojpuri and Maithili". The Avenue Mail. 21 March 2018 இம் மூலத்தில் இருந்து 28 மார்ச் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190328090028/https://www.avenuemail.in/ranchi/jharkhand-gives-second-language-status-to-magahi-angika-bhojpuri-and-maithili/118291/. 
 5. "Jharkhand notifies Bhumij as second state language". The Avenue Mail. 5 January 2019. https://avenuemail.in/jharkhand-notifies-bhumij-as-second-state-language/. 
 6. 6.0 6.1 6.2 "State animals, birds, trees and flowers". Wildlife Institute of India இம் மூலத்தில் இருந்து 4 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090304232302/http://www.wii.gov.in/nwdc/state_animals_tree_flowers.pdf. 
 7. http://indiarailinfo.com/arrivals/ranchi-junction-rnc/384
 8. Airporthttp://www.gcmap.com/airport/IXR
 9. http://ourairports.com/airports/VEJS/
 10. http://www.census2011.co.in/census/state/jharkhand.html
 11. 11.0 11.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-10-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161026131145/http://archive.jharkhand.gov.in/ceo/ACPCList.htm. 
 12. Bhaumik, Subir (5 February 2009). "Cell phones to fight India rebels". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7871976.stm. பார்த்த நாள்: 6 May 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்க்கண்டு&oldid=3747558" இருந்து மீள்விக்கப்பட்டது