பேச்சு:சார்க்கண்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்க்கண்டு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


ஆதரம்[தொகு]

இந்தப் பெயருக்கான தமிழ் பாடநூல் ஆதாரம்? எதுவும் இல்லை!! எந்த அடிப்படையில் மாநிலத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது? ஜார்க்கண்ட் விமுக்தி மோர்ச்சா! ஜார்க்கண்ட் மக்களவைத் தொகுதி என்றிருக்கும் போது இது தமிழக மாணவர்களால் ஜார்க்கண்ட் என்று அறியப்படும் போது இதை எந்த அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது? மாற்றியவர்கள் இதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவும்! அரசாங்க ஆவணம்! அல்லது அதற்கு சமமான அரசுக் குறிப்பேட்டை சமர்ப்பிக்கலாம்.--செல்வம் தமிழ் (பேச்சு) 14:54, 15 மார்ச் 2013 (UTC)

அமைதி கொள்ளுங்கள் செல்வம்! இனிய முறையில் கேட்கலாமே! அதை விடுத்து அதிகாரம் செய்வதைப் போல் கேட்டிருக்கிறீர்கள். இவ்வாறு கேட்பது முறையல்ல.

விளக்கம் இதோ: ஜா என்ற ஒலிப்பு தமிழில் இல்லாததால் யா என்றும் சா என்றும் இடத்திற்கேற்ப எழுதுவதே வழக்கம். ஜாதி, ஜனம் என்பதைவிட சாதி, சனம் என்றே பயன்படுத்துகிறோம். கிரந்தம் தவிர்த்து எழுதுவோர் சார்க்கண்ட் என்றே எழுதுவர். நீங்கள் வேண்டுமானால் ஜார்க்கண்ட் என்று பயன்படுத்துங்கள். ஆனால், உங்கள் விருப்பப்படி எல்லா இடங்களிலும் பெயரை மாற்றி நேரத்தை வீணாக்க வேண்டாம். இது சரியே! நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:46, 15 மார்ச் 2013 (UTC).

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சார்க்கண்டு&oldid=3747876" இலிருந்து மீள்விக்கப்பட்டது