பாகுட்

ஆள்கூறுகள்: 24°38′N 87°51′E / 24.63°N 87.85°E / 24.63; 87.85
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகுட்
பாக்கூட்
நகராட்சி
கல் உடைக்கும் ஆலை, பாகுட்
கல் உடைக்கும் ஆலை, பாகுட்
பாகுட் is located in சார்க்கண்டு
பாகுட்
பாகுட்
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் வடகிழக்கில் பாகுட் நகரத்தின் அமைவிடம்
பாகுட் is located in இந்தியா
பாகுட்
பாகுட்
பாகுட் (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°38′N 87°51′E / 24.63°N 87.85°E / 24.63; 87.85
நாடு இந்தியா
மாநிலம்ஜார்கண்ட்
மாவட்டம்பாகுட்
பரப்பளவு
 • மொத்தம்11.08 km2 (4.28 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்45,840
 • அடர்த்தி4,100/km2 (11,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்816107
தொலைபேசி குறியீடு+91-06435
வாகனப் பதிவுJH-16
இணையதளம்www.pakur.nic.in

பாக்குர் அல்லது பாகுட் (Pakur), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த பாகுட் மாவட்டத்ஹின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். மாநில தலைநகரான ராஞ்சிக்கு வடகிழக்கில் 362 கிலோ மீட்டர் தொலைவிலும், தன்பாத் நகரத்திற்கு வடகிழக்கில் 212 கிலோ மீட்டர் தொலைவிலும் பாகுட் நகரம் அமைந்துள்ளது. பாகுட் நகரம் 11.08 சதுர கிலோமீட்டர்கள் (4.28 sq mi) பரப்பளவு கொண்டது.[1]இராஜ்மகால் மலைத்தொடர்களில் அமைந்த தாமோதர் பள்ளத்தாக்கில் உள்ள பாகுட் நகரம் கடல் மட்டத்திலிருந்து 12 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்நகரத்தில் இராஜ்மகால் நிலக்கரி வயல்கள் அதிகம் உள்ளது.[2]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 19 வார்டுகளும், 9,333 வீடுகளும் கொண்ட பாகுட் நகராட்சியின் மக்கள் தொகை 45,840 ஆகும். அதில் ஆண்கள் 23,653 மற்றும் பெண்கள் 22,187 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 938 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.86% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.60% ஆகவுள்ளது.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 66.71%, இசுலாமியர் 28.09%, சமணர்கள் 0.25%, கிறித்தவர்கள் 3.12% மற்றும் பிறர் 1.28% ஆகவுள்ளனர்.[3]

பொருளாதாரம்[தொகு]

இந்நகரத்தின் முதன்மைத் தொழில், நிலக்கரிச் சுரங்கம் மற்றும் கருங்கற்களை இயந்திரங்களில் உடைக்கும் தொழிற்சாலைகள் ஆகும்.

போக்குவரத்து[தொகு]

இந்நகரத்தில் உள்ள பாகுட் தொடருந்து நிலையம் வழியாக கொல்கத்தா, தன்பாத், ராஞ்சி, கயா நகரங்களுக்கு தொடருந்துகள் இயங்குகிறது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Census Handbook, Pakur, Series 21, Part XII B" (PDF). Page 25: District Primary Census Abstract, 2011 census. Directorate of Census Operations Jharkhand. பார்க்கப்பட்ட நாள் 24 November 2020.
  2. Roychoudhury, P.C. "Bihar District Gazetteers: Santhal Parganas". Chapter I: General. Secretariat Press, Patna, 1965. பார்க்கப்பட்ட நாள் 5 December 2020.
  3. Pakaur Population Census 2011
  4. Pakaur Railway Station

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகுட்&oldid=3517050" இலிருந்து மீள்விக்கப்பட்டது