பழங்குடிப் பெண் கலைஞர்கள் கூட்டுறவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழங்குடிப் பெண் கலைஞர்கள் கூட்டுறவு
உருவாக்கம்ஆகத்து 31, 1993 (1993-08-31)
நிறுவனர்புலு இமாம்
வகைபெண் கலைஞர்கள் கூட்டுறவு
தலைமையகம்ஹசாரிபாக், ஜார்க்கண்ட், இந்தியா

பழங்குடிப் பெண் கலைஞர்கள் கூட்டுறவு (Tribal Women Artists Cooperative (TWAC) அமைப்பைத் துவக்கத்தில் புலு இமாம்[1]என்பவர் ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு 1993ம் ஆண்டில் ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் நகரத்தில் நிறுவப்பட்டது. பழங்குடிப் பெண் கலைஞர்கள் கூட்டுறவுத் திட்டத்திற்கு முதலில் புது தில்லியில் உள்ள இந்தியாவிற்கான ஆஸ்திரேலியத் தூதரகம் நிதியுதவி வழங்கியது. இந்த அமைப்பை 2019ல் பத்மசிறீ விருது பெற்ற சமுக ஆர்வலர் புலு இமாம் என்பவரால் தொடர்ந்து வழிநடத்தப்பட்டது. புலு இமாம் ஜார்க்கண்ட் மாநிலப் பழங்குடிப் பெண்களிடையே சோகராய் மற்றும் கோவர் ஓவியக் கலை[2] மரபை மேம்படுத்தினார். இக்கலையால் ஆயிரக்கணக்கான கிராமியப் பழங்குடிப் பெண்களுக்குப் பயனளித்தது. மேலும் உலகெங்கிலும் உள்ள முக்கியக் கலைக்கூடங்களில் பல கண்காட்சிகள் மூலம் சோகராய் மற்றும் கோவர் ஓவியங்கள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.[3]

இந்தத் தனித்துவமான பழங்குடியினப் பெண்கள் கலைத் திட்டம் சுமார் 40 பெண் கலைஞர்களுடன் தொடங்கப்பட்டது. இது மண் வீடுகளின் சுவர்களில் உள்ள கலையைக் காகிதத்தில் கொண்டு வரவும், தொழில் ரீதியாக வண்ணம் தீட்டவும் தொடங்கியது. இன்று ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள 60 க்கும் மேற்பட்ட சர்வதேச அரங்குகளில் தங்கள் கலைகளைக் காட்சிப்படுத்த 5,000 க்கும் மேற்பட்ட பழங்குடியினப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. [4]

பல தசாப்தங்களாக இந்தப் பெண் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பழங்குடியினக் கலை பண்பாட்டு அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. மேலும் ஜார்கண்டில் பழங்குடியினரின் கலை மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் ஆர்வமுள்ள எவரும் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்கு அணுகலாம். 1990களின் முற்பகுதியில் கூட்டுறவு அமைப்பு மூலம் தயாரிக்கப்பட்ட பழங்குடியினர் ஓவியங்களின் முதல் தொகுப்பு புலு இமாம் சேகரிப்பின் ஒரு பகுதியாகும். மேலும் இது கூட்டுறவு அமைப்பின் மூலம் பிரத்தியேகமாகக் கிடைக்கிறது.

நோக்கம்[தொகு]

ஜார்க்கண்டில் உள்ள பழங்குடிப் பெண்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு சோகராய் மற்றும் கோவர் ஓவியங்கள் உதவுகிறது. திறந்த நிலக்கரிச் சுரங்கங்கள் திட்டம் மூலம் பழங்குடியினரை அச்சுறுத்தப்படும் இடப்பெயர்வு, பூர்வீக உரிமைகள் இழத்தல் மற்றும் பழங்குடியினருக்கு முக்கியமான காடுகளை அழித்தல் மற்றும் புலிகள் மற்றும் யானைகளுக்குத் தாழ்வாரங்களாகப் பயன்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பழங்குடியினப் பெண்களுக்கு அவர்களின் அடையாளத்தில் வலிமை மற்றும் பொருளாதார ஆதரவுக்கான வழிமுறையாக இந்தக் கலைத் திட்டம் உருவாக்கப்பட்டது.

சோகராய் மற்றும் கோவர் ஓவியக் கண்காட்சிகள் மற்றும் கலைப் படைப்புகளின் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் மூன்று கணக்குகளாகப் பிரிக்கப்படுகிறது:

  1. பழங்குடியினப் பெண் கலைஞர்களுக்கான நல நிதி.
  2. வேலைவாய்ப்பு நிதி, இதன் மூலம் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு நேரடியாகக் கலைஞருக்குச் செல்கிறது.
  3. கூட்டுறவு வளர்ச்சி நிதி.

முதன்மை சேகரிப்பு அமைப்புகள்[தொகு]

சோகராய் மற்றும் கோவர் ஓவியங்கள் பல்வேறு நாடுகளின் கீழ்க்கண்ட அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

  1. ஆஸ்திரேலியா அருங்காட்சியகம், சிட்னி, ஆஸ்திரேலியா
  2. கலைக் கூடம், நியூ சவுத் வேல்ஸ், சிட்னி, ஆஸ்திரேலியா
  3. காசுலா கலை மையம், காசுலா[5]சிட்னி, ஆஸ்திரேலியா
  4. குயின்ஸ்லாந்து கலைக்கூடம், பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா
  5. பவர்ஹவுஸ் அருங்காட்சியகம், சிட்னி, ஆஸ்திரேலியா
  6. பிளிண்டர்ஸ் அருங்காட்சியகம், அடிலெயிட், ஆஸ்திரேலியா
  7. டயட்மர் ரோதர்முண்ட் கலைச் சேகரிப்புகள், ஐடெல்பெர்கு, ஜெர்மனி
  8. வோக்கர்குண்டே அருங்காட்சியகம், ஐடெல்பெர்கு, ஜெர்மனி
  9. சோலி. பி. காட்ரேஜ் கலைக்கூடம், மும்பை, இந்தியா
  10. தானியலா பெஸ்சி கலைக்கூடம், மிலன், இத்தாலி
  11. தார்சிட்டோ ஸ்டூடியோ, உரோம்
  12. மார்கஸ் லெதர்தலே கலைச்சேகரிப்புகள், நியூ யார்க்
  13. மைக்கேல் சபாத்தியர் கலைச்சேகரிப்புகள், பிரான்சு
  14. தொல்லியல் மற்றும் மானிடவியல் அருங்காட்சியகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்[6]
  15. கனடா தேசியக் கலைக்கூடம், ஒட்டாவா[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Creative Crusader". democraticworld.in. பார்க்கப்பட்ட நாள் 2022-03-17.
  2. ArtsPositive (2018-10-05). "Saving Khovar and Sohrai Tribal Art". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-17.
  3. "79-YO Padma Shri Awardee Spent 30 Years Preserving 10000-Year-Old Art". The Better India (in ஆங்கிலம்). 2022-02-23. பார்க்கப்பட்ட நாள் 2022-03-17.
  4. "The Painted Forest Villages of Hazaribagh". SOAS University of London. பார்க்கப்பட்ட நாள் 4 May 2022.
  5. Casula, New South Wales
  6. Deogharia, Jaideep (12 December 2016). "Art of tribal women from Hazaribag now decorate interiors". Times of India. https://timesofindia.indiatimes.com/city/ranchi/art-of-tribal-women-from-hazaribag-now-decorate-interiors-in-the-us/articleshow/55946993.cms. 
  7. Nixon, Lindsay (21 November 2019). "Indigenous Art Is So Camp". Canadian Art. https://canadianart.ca/features/indigenous-art-is-so-camp/.