பாரசுநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாரசுநாத்
Parasnath
पारसनाथ
View of shikharji from road towards parasnath railway station.JPG
பாரசுநாத் தொடர்வண்டி நிலையத்திலிருந்து மலை உச்சியின் காட்சி.
உயர்ந்த இடம்
உயரம்1,365 m (4,478 ft)
ஆள்கூறு23°57′48″N 86°07′44″E / 23.9634°N 86.129°E / 23.9634; 86.129ஆள்கூறுகள்: 23°57′48″N 86°07′44″E / 23.9634°N 86.129°E / 23.9634; 86.129[1]
புவியியல்
அமைவிடம்கிரிதி மாவட்டம், சார்கண்ட், இந்தியா
மலைத்தொடர்பாரசுநாத் மலைத்தொடர்
Climbing
Easiest routeமலையேறுதல்

பாரசுநாத் (Parasnath) என்பது பாரசுநாத் மலைத்தொடரில் உள்ள ஒரு மலைச்சிகரம் ஆகும். இந்தியாவின் சார்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதி மாவட்டத்தில் இருக்கும் சோட்டா நாக்பூர் பீடபூமியின் கிழக்கு முனையை நோக்கி இச்சிகரம் அமைந்துள்ளது.[2]. இதன் மலை உச்சியில் சிக்கார்சி சைன கோவில் உள்ளது,. இது ஒரு முக்கியமான சைன திருத்தலம் ஆகும்[3].

சார்கண்டின் உயரமான சிகரம்[தொகு]

1365 மீட்டர் உயரமுள்ள பாரசுநாத் சார்கண்ட் மாநிலத்தின் மிக உயரமான ஒரு மலை உச்சியாகும். எவரெசுட்டு சிகரத்திற்கு வடக்கே 450 கி.மீ தூரத்திலிருந்து இச்சிகரம் ஒரு தெளிவான நாளில் ஒரே நேர்க்கோட்டில் புலப்படாது என கோட்பாடுகள் தெரிவிக்கின்றன [4]. பாரசுநாத் ரயில்நிலையத்திலிருந்து இம்மலைக்கு எளிதில் செல்லலாம். இப்பகுதியில் நீர்வீழ்ச்சி மற்றும் பிற ஈர்க்கும் சுற்றுலா தலங்களும் உள்ளன[5]. மாநிலத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் பாரசுநாத் சிகரமும் ஒன்றாகும். சமணத்தை பின்பற்றுபவர்களுக்கு வழிபடுவதற்கான ஒரு முக்கிய இடமுமாகும் [5]. ஒவ்வோர் ஆண்டும் இத்தலத்தின் புகழும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. சூலை மாதம் முதல் மார்ச்சு மாதம் வரையிலான மாதங்கள் இத்தலத்தைப் பார்வையிட சிறந்த மாதங்கள் ஆகும் [6]. சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களில் 20 பேர் இம்மலைச் சிகரத்தில் முக்தி பெற்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரசுநாத்&oldid=3110479" இருந்து மீள்விக்கப்பட்டது