சிம்டேகா

ஆள்கூறுகள்: 22°37′N 84°31′E / 22.62°N 84.52°E / 22.62; 84.52
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்டேகா
பேரூராட்சி
கடிகாரச் சுற்றுப்படி:கேலாக்காக் அணை, மலைச்சமவெளி, மாவட்ட ஆட்சியர் அலுவலம்
கடிகாரச் சுற்றுப்படி:கேலாக்காக் அணை, மலைச்சமவெளி, மாவட்ட ஆட்சியர் அலுவலம்
அடைபெயர்(கள்): விளையாட்டுக்களின் நாற்றங்கால்[1]
சிம்டேகா is located in சார்க்கண்டு
சிம்டேகா
சிம்டேகா
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சிம்டேகா நகரத்தின் அமைவிடம்
சிம்டேகா is located in இந்தியா
சிம்டேகா
சிம்டேகா
சிம்டேகா (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°37′N 84°31′E / 22.62°N 84.52°E / 22.62; 84.52
நாடு இந்தியா
மாநிலம்ஜார்கண்ட்
மாவட்டம்சிம்டேகா
தோற்றுவித்தவர்பிருகார் இராச்சியம்
அரசு
 • வகைபேரூராட்சி
 • நிர்வாகம்சிம்டேகா பேரூராட்சி மன்றம்
ஏற்றம்418 m (1,371 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்42,944
 • தரவரிசை22
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்835223
தொலைபேசி குறியீடு+91-6525
வாகனப் பதிவுJH-20
இணையதளம்simdega.nic.in

சிம்டேகா (Simdega), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த சிம்டேகா மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். சோட்டா நாக்பூர் மேட்டு நிலத்தின் தென்மேற்கில் அமைந்த சிம்டேகா நகரம், கடல் மட்டத்திலிருந்து 415 மீட்டர் (1371 அடி) உயரத்தில் உள்ளது. இந்நகரம் விளையாட்டுகளின் நாற்றங்கால் என்ற பெருமை கொண்டது.[2] மாநிலத் தலைநகரம் ராஞ்சி 143 கிலோ மீட்டர் தொலைவிலும், ரூர்கேலா நகரம் 35 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இம்மாவட்டத்தில் ஒடியாப் பண்பாட்டின் தாக்கம் அதிகம் கொண்டது. இந்நகரத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 18 வார்டுகளும், 8,252 வீடுகளும் கொண்ட சிம்டேகா பேரூராட்சியின் மக்கள் தொகை 42,944 ஆகும். அதில் 21,884 ஆண்கள் மற்றும் பெண்கள் 21,060 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 962 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5421 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,923 மற்றும் 19,920 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 41.07%, இசுலாமியர் 15.78%, கிறித்தவர்கள் 37.81% மற்றும் பிறர் 5.41% ஆகவுள்ளனர்.[3]

கல்வி[தொகு]

இந்நகரத்தில் கத்தோலிக்க கிறித்துவ சபைகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளது.

விளையாட்டு[தொகு]

சிம்டேகா ஹாக்கி விளையாட்டரங்கம்

சிம்டேகா நகரம், ஜார்கண்ட் மாநிலத்தின் ஹாக்கி விளையாட்டின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில், ஹாக்கி விளையாட்டில் இந்நகரத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சைல்வனுஸ் துங் தஙகப்பதக்கம் பெற்றார். மற்றொரு ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டு வீரர் மைக்கேல் கிண்டோ, 1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டில் பங்கு பற்றினர். இந்நகரத்தைச் சேர்ந்த அசுந்தா லக்ரா பெண் விளையாட்டு வீராங்கனை இந்தியாவின் ஹாக்கி அணியின் கேப்டனாக விளையாடினார்.[4]

இந்நகரத்தில் அஸ்டிரோடர்ப் ஹாக்கி விளையாட்டரங்கம் அண்மையில் நிறுவப்பட்டது.[5] ஆல்பர்ட் எக்கா விளையாட்டரங்கம் பிற வெளிப்புற விளையாட்டுகளுக்கு பயன்படுகிறது.

புவியியல் & தட்ப வெப்பம்[தொகு]

சிம்டேகா நகரம் 22°37′N 84°31′E / 22.62°N 84.52°E / 22.62; 84.52 பாகையில் உள்ளது.[6] இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 418 மீட்டர் (1371 அடி) உயரத்தில் உள்ளது.

செவிலியர் பயிற்சிக் கல்லூரி, சாந்தி பவன் மருத்து மையம், சிம்டேகா

இதன் கோடைக்கால அதிகபட்ச வெப்பம் 33.0 °C; குளிர்கால குறைந்த வெப்பம் 17.9 °C; ஆண்டின் ஆகஸ்டு மாத மழைப்பொழிவு 410 mm ஆகும்.[7]

பொருளாதாரம்[தொகு]

மலைப்பாங்கான பகுதியில் அமைந்த சிம்டேகா நகரத்தின் முக்கியத் தொழில் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பாகும்.

கனிம வளம், வைரம் தோண்டுதல் மற்றும் எரிசக்தி திட்டங்கள்[தொகு]

  • சிம்டேகா நகரத்தில் பாயும் சங்கு ஆற்றில் வைரம் போன்ற நவரத்தினக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்படுகிறது.[8][9][10][11][12][13][14]
  • ஜிண்டால் நிறுவனம் 2640 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் சிம்டேகா நகரத்தில் நிறுவ திட்டமிட்டுள்ளது.[15]
  • சிம்டேகா மாவட்டத்தின் சில இடங்களில் உரேனியம் வெட்டி எடுக்கப்படுகிறது.
  • 25 மெகா வாட் திறன் கொண்ட சிறு புணல் மின் நிலையம் சிம்டேகா நகரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

செல்லாக் பசை[தொகு]

A decorative medal made in France in early 20th century moulded from shellac compound, the same used for phonograph records of the period.
செல்லாக் உற்பத்தி நிறுவனத்திற்கு பிரான்சு நாட்டு அரசு வழங்கிய பரிசு

சிம்டேகா நகரத்தில் செல்லாக் எனும் பசை உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.

போக்குவரத்து[தொகு]

சிம்டேகா நகரம் ஜார்கண்ட்-ஒடிசா-சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ளது. சிம்டேகாவிலிருந்து அண்டை நகரங்களுக்குச் செல்லும் தொலைவுகள்:

  1. ராஞ்சி - 155  கிலோ மீட்டர்
  2. கும்லா - 77 கிலோ மீட்டர்
  3. சம்பல்பூர் ( ஒடிசா)- 158 கிலோ மீட்டர்
  4. ரூர்கேலா( ஒடிசா) - 70 கிலோ மீட்டர்

சுற்றுலா[தொகு]

Palkot Wildlife Sanctuary
பால்கோட் காட்டுயிர் காப்பகம்
கேலாகாக் அணை
கேலாகாக் அணை
இராம்ரேகா அனை
இராம்ரேகா அனை
  1. கேலாகாக் அணை
  2. இராம்ரேகா அணை
  3. பால்கோட் காட்டுயிர் காப்பகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. . http://simdega.nic.in/profile.html. 
  2. "Simdega lives to play hockey". http://www.telegraphindia.com/1141202/jsp/frontpage/story_19131384.jsp#.VdRlAvmqqko. 
  3. Simdega Population, Religion, Caste, Working Data Simdega, Jharkhand - Census 2011
  4. "Asunta Lakra, a symbol of tribal hope". http://timesofindia.indiatimes.com/sports/hockey/top-stories/Asunta-Lakra-a-symbol-for-tribal-hope/articleshow/11772062.cms. 
  5. "Chak de on Astroturf - Simdega's present to future Asuntas & Dungdungs". http://www.telegraphindia.com/1150410/jsp/jharkhand/story_13659.jsp#.VdWTAvmqqko. 
  6. "Maps, Weather, and Airports for Simdega, India". http://www.fallingrain.com/world/IN/38/Simdega.html. 
  7. "CLIMATE-DATA.ORG". 2016-02-02. http://en.climate-data.org/location/173869/. 
  8. "Centre grants 'precious metal permit' - Naveen Jindal's group gets three-year clearance for exploration, zeroes in on Gumla and Simdega". The Telegraph. 19 October 2005. http://www.telegraphindia.com/1051020/asp/jharkhand/story_5373993.asp. 
  9. "De Beers unveils mining blueprint". http://www.telegraphindia.com/1040313/asp/jamshedpur/story_2999171.asp. 
  10. "History of Diamond mining in Jharkhand and Chattisgarh". 2007-08-29. http://nitishpriyadarshi.blogspot.in/2007/08/history-of-diamond-mining-in-jharkhand.html. 
  11. "GSI spots diamond reserve". http://www.telegraphindia.com/1060501/asp/jharkhand/story_6149529.asp. 
  12. "Jharkhand may reap diamond harvest - Deccan Herald - Internet Edition". http://archive.deccanherald.com/deccanherald/may162006/national23902006515.asp. பார்த்த நாள்: 2015-10-09. 
  13. "GOI- Ministry of Mines- Details of Programmes taken up during current field season 2015-16.- Search for Kimberlite/Lamproite in parts of Simdega District, Jharkhand". http://www.mines.nic.in/writereaddata/UploadFile/lu212.pdf. 
  14. "Jharkhand may reap diamond harvest - Deccan Herald - Internet Edition". http://archive.deccanherald.com/deccanherald/may162006/national23902006515.asp. 
  15. "JSPL to invest Rs 1 lakh cr in Jharkhand". Business Standard. 28 September 2011. http://smartinvestor.business-standard.com/market/Features-89545-Featuresdet-JSPL_to_invest_Rs_1_lakh_cr_in_Jharkhand.htm#.VuZgXPl97IU. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்டேகா&oldid=3742500" இருந்து மீள்விக்கப்பட்டது