கிரீடிக்

ஆள்கூறுகள்: 24°11′N 86°18′E / 24.18°N 86.3°E / 24.18; 86.3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிடிக்
நகரம்
மேலிருந்து:
சிகாரிஜி பார்சுவநாத், உசிரி அருவி
கிரிடிக் is located in சார்க்கண்டு
கிரிடிக்
கிரிடிக்
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் கிரிடிக் நகரத்தின் அமைவிடம்
கிரிடிக் is located in இந்தியா
கிரிடிக்
கிரிடிக்
கிரிடிக் (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°11′N 86°18′E / 24.18°N 86.3°E / 24.18; 86.3
நாடு இந்தியா
மாநிலம்ஜார்கண்ட்
மாவட்டம்கிரீடிக்
பெயர்ச்சூட்டுமலைகளால் (கிரி) சூழப்பட்டது
பரப்பளவு
 • மொத்தம்87.4 km2 (33.7 sq mi)
ஏற்றம்289 m (948 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,14,533
 • அடர்த்தி1,300/km2 (3,400/sq mi)
மொழிகள்
 • அலுவலல்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்815301
தொலைபேசி குறியீடு0-6532
வாகனப் பதிவுJH-11
இணையதளம்www.giridih.nic.in

கிரிடிக் (Giridih) இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிடிக் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். 1972-க்கு முன்னர் இம்மாவட்டப் பகுதிகள் ஹசாரிபாக் மாவட்டத்தில் இருந்தது. கிரி எனும் இந்தி மொழி சொல்லுக்கு மலை என்றும், உள்ளூர் மொழியில் டிக் என்பதற்கு நிலம் என்றும் பொருள். கிரிடிக் நகரம் மலைகளால் சூழப்பட்ட நிலப்பகுதியாக இருப்பதால் இதற்கு கிரிடிக் எனப்பெயராயிற்று.

இந்தியப் புள்ளியியல் கழகத்தின் ஒரு கிளை கிரிடிக் நகரத்தில் உள்ளது. [1]மேலும் இந்நகரத்தில் தேசிய மாதிரி சர்வே அமைப்பின் கிளையும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கிரிடிக் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,14,533 ஆகும். அதில் ஆண்கள் 59,966 மற்றும் பெண்கள் 54,567 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15,783 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 910 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.71% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 67.66%, முஸ்லீம்கள் 30.31%, சமணர்கள் , கிறித்தவர்கள் 0.84% மற்றும் பிற சமயத்தவர்கள் 1.19% ஆகவுள்ளனர்.[2]

போக்குவரத்து[தொகு]

தொடருந்து[தொகு]

கிரிடிக் தொடருந்து நிலையம் ஒரு நடைமேடைக் கொண்டது. இங்கிருந்து மதுப்பூர், கொல்கத்தா மற்றும் பாட்னா செல்வதற்கு தொடருந்துகள் உள்ளது.[3]

சாலைகள்[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 19 (பழைய எண் 2) பெரும் தலைநெடுஞ்சாலை இந்நகரத்திற்கு வெளிப்புறம் வழியாகச் செல்கிறது. இந்நகர வெளியூர் பேருந்து நிலையத்திலிருந்து தன்பாத், [[பொகாரோ, ஹசாரிபாக், தேவ்கர், ஆசன்சோல், கொல்கத்தா, ஹவுரா, பாட்னா, ராஞ்சி மற்றும் ஜம்சேத்பூர் போன்ற முக்கிய நகரகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பொருளாதாரம்[தொகு]

கிரிடிக்கில் மைக்கா மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் அதிகம் கொண்டது. இகு மென்மையான இரும்பு தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றாக கிரீடீஹ் மாவட்டம் 2006-இல் அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான நிதியினை பெறும் 21 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீடிக்&oldid=2952726" இருந்து மீள்விக்கப்பட்டது