சரந்தா காடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரந்தா காடு என்பது இந்திய மாநிலமான சார்க்கண்டில் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த காடாகும். இந்தப் பகுதி சிங் தியோ குடும்பத்தின் ( சாராய்கேலாவின் முந்தைய அரச குடும்பம்) தனியார் வேட்டை இருப்பிடமாக இருந்தது. இந்த காடு 820 சதுர கிமீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.[1] சரந்தா (செரெங்டா) என்பதற்குப் பாறையிலிருந்து வரும் நீர் என்று பொருள் [2] இங்கு 550 m (1,800 அடி) உயரத்தில் வனப்பகுதியின் நடுவே தல்கோபாத் என்ற இயற்கையழகு நிறைந்த ஒரு கிராமம் உள்ளது.[1] தல்கோபாத் கிராமம் மனோகர்பூரிலிருந்து சுமார் 46 km (29 mi) -ஆகவும், ஜாம்சேத்பூரிலிருந்து சுமார் 160 km (99 mi) தூரத்திலும் அமைந்துள்ளது.

இப்பகுதியில் இரும்புத் தாது உட்பட சுரங்க நகரங்களான குவா, சிரியா, கிரிபுரு, நோமுண்டி ஆகிய நகரங்களில் ஹோ இனப் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.

குங்கிலியம் (சால்) இப்பகுதியில் மிக முக்கியமான மரமாகும். மேலும் இப்பகுதியில் பாறை மண் அதிகளவில் காணப்படுகிறது. இங்குள்ள சால் மரமானது இலையுதிர் மரமாகும். மற்றும் கோடைகாலத்தின் ஆரம்பத்தில் அதன் இலைகளை உதிர்த்து விடுகிறது எனினும் இப்பகுதியிலுள்ள காடுகளின் வளர்ச்சி பொதுவாக எப்பொழுதும் பசுமையானதாகவே உள்ளது. சரந்தா காடுகளில் மாம்பழம், நாவல் மரம், பலாப்பழம், கொய்யா போன்ற மரங்கள் உள்ளன. இதர முக்கியமான மரங்கள் இலுப்பை, குசும், திலாய், ஹரின் ஹாரா ( Armossa rohitulea), குலார் ( பைக்கஸ் glomerata ), மற்றும் கரு மருது. ஆகிய மரங்களும் உள்ளன.[3]

பாதுகாக்கப் பட்ட வனப்பகுதி பல விலங்குகளின் இருப்பிடமாகும். இப்பகுதியின் சரந்தா மற்றும் போராஹத் காடுகளில் காட்டு யானைகள் பொதுவாகக் காணப்படுகின்றன. கடமான் மற்றும் புள்ளிமான் மந்தைகள் எப்பொழுதும் காடுகளைச் சுற்றித் திரிகின்றன. காட்டெருது இங்கு இன்னும் காணப்படுகிறது. புலிகள் எப்பொழுதும் ஏராளமாக இல்லை எனினும் இங்குஅவை ஒரு குறிப்பிட்ட அளவில் வசிக்கின்றன். சிறுத்தைகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன.[4]

சரந்தா காடுகளின் மனிதர்கள் நுழையவியலாத, வசிக்கவியலாத 1100 ஹெக்டேர் காடுகளில் சுமார் 40% காடுகள் இங்குள்ள இரும்புத்தாது எடுப்பதற்காகச் சுரங்கங்கள் தோண்டி வெட்டியெடுக்கக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. சுரங்க குத்தகைக்கு மேலும் பல புதிய ஆர்வலர்கள் காத்திருக்கிறார்கள். சரந்தாவின் காடு பல யானைகளின் வாழ்விடமாகும். மேலும் ஒடிசா வின கேந்துஜர் மாவட்டத்தைச் சேர்ந்த யானைகளின் வாழ்விடங்களோடு ஒன்றுக்கொன்று ஒட்டிய தொடர்புடையவை. கரோ மற்றும் கய்னா என்ற வற்றாத ஆறுகள் இந்த வனப்பகுதிகளில் பாய்கின்றன. எனவே இங்கு பலவிதமான மலர் தாவரங்கள் மற்றும் விலங்கின வளங்களின் ஆதாரமாக இப்பகுதித் திகழ்கிறது. இருப்பினும் 70-80% காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன; மரங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன; இன்று இந்தத் தளம் சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது

இந்த பகுதி முன்னர் மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் இயக்கங்களால் பிரச்சனைக்குரியதாக இருந்தது. ஆனால் அண்மைய ஆண்டுகளில் பிரச்சினைகள் தணிந்தன. மேலும் இது ஒரு முக்கிய சுற்றுலா மையமாகவும் மாறியுள்ளது. மனோகர்பூர் பகுதியில் பல சுற்றுலா இடங்கள் உள்ளன. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்கள் இங்கு சுற்றுலா செல்ல ஏற்றகாலமாகும்.[5]

சரந்தா வளர்ச்சித் திட்டம்[தொகு]

சரந்தா அபிவிருத்தி திட்டம் (எஸ்.டி.பி) என்பது சரந்தா காட்டில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களை வளர்ச்சியடையச் செய்வதற்கான ஒரு திட்டமாகும். மாவோயிஸ்டுகளின் பல பயிற்சி முகாம்கள் அங்கு அமைந்துள்ளன.[6] 56 கிராமங்களில் 36,500 மக்கள் தொகையுடன் சுமார் 7000 பழங்குடி குடும்பங்கள் உள்ளன.

சரந்தா அபிவிருத்தி திட்டத்தின் முக்கிய கூறுகள் பின்வருமாறு:[7]

  • இந்திரா ஆவாஸ் யோஜனாவின் கீழ் 6,000 பயனாளிகளுக்கு வீடு கட்டுவது ஏற்கனவே டிசம்பர் 2011 இல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ பணிகளுக்காக உள்ளூர் பழங்குடி இளைஞர்கள் 56 பேரை ரோஸ்கர் மித்ராக்களை நியமித்தல். இதற்காக ஏற்கனவே 6,000 வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் ரூ .60 லட்சம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வசிப்பிடங்களுக்கும் இணைப்பை மேம்படுத்துவதற்காக 11 சாலைகள் மற்றும் ஒரு பாலம் பி.எம்.ஜி.எஸ்.ஒய் கீழ் கட்டப்பட உள்ளது. அவற்றில் இரண்டு சாலைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
  • வன உரிமைகள் சட்டம், 2006 அமலாக்கம், இதன் கீழ் 2,122 கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன, மேலும் அவற்றில் 176 க்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
  • SAIL செலுத்திய 7,000 சூரிய விளக்குகள், 7,000 டிரான்சிஸ்டர்கள் மற்றும் 7,000 மிதிவண்டிகளின் விநியோகம் 2012 ஜூலை இறுதிக்குள் முடிக்கப்பட உள்ளது.
  • SAIL இன் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மீண்டும் ஐந்து நடமாடும் சுகாதார பிரிவுகளைத் தொடங்குவது. அவற்றில் மூன்று செயல்பாட்டில் உள்ளன, மேலும் இரண்டு ஜூலை 2012 இறுதிக்குள் தொடங்கப்படும்ம்.
  • பிப்ரவரி 2012 இல் அனுமதிக்கப்பட்ட சுமார் 36,000 ஹெக்டேர் (89,000 ஏக்கர்) கொண்ட ஆறு நீர்நிலை மேம்பாட்டுத் திட்டங்களின் தொடக்கம்.
  • குடிநீர் விநியோகத்திற்கான அமைக்கப்பட்டுள்ள 128 ஆழ்துளைக் குழாய்களின் செயல்பாட்டினை மேம்படுத்துதல்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரந்தா_காடுகள்&oldid=3313939" இருந்து மீள்விக்கப்பட்டது