நாவல் (மரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தக் கட்டுரை ஒரு வகை மரத்தைப் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, நாவல் (தொடர்புடைய பக்கம்) என்பதைப் பாருங்கள்.
நாவல்
Syzygium cumini - fruits.jpg
நாவல் (சிசிஜியம் கியுமினி) Syzygium cumini
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: மக்னோலியோப்சிடா
வரிசை: மிர்த்தாலேஸ்
குடும்பம்: மிர்த்தாசியே
பேரினம்: சிசிஜியம்
இனம்: சி. கியூமினி
இருசொற் பெயரீடு
சிசிஜியம் கியூமினி
(L.) Skeels.

நாவல் மரம் பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியாவுக்கும் இந்தோனீசியாவுக்கும் உரியது. இம்மரம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரையும் வாழும். இம்மரத்தின் நாவற்பழம் செங்கருநீல நிறமுடையதாகவும் இனிப்பான சுவையுடையதாகவும் இருக்கும்.

மருத்துவப் பயன்கள்[தொகு]

நாவல் மரத்தின் பட்டை, நாவற்பழம்,விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவை ஆகும்.நாவல் மருத்துவ மூலிகைப் பயன்பாடுடையது. சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு போக்க இம்மூலிகை பயன்படுகிறது. நீரிழிவு நோய்க்கு இம்மரத்தின் விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன. நாவற்பழங்கள் உடல் சூட்டைக் குறைக்க பயன்படுகின்றன. இப்பழங்கள் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், இரத்தத்துடன் கூடிய பேதி ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இப்பழமும், இப்பழத்தின் காயவைத்து அரைத்த பொடியும் சர்கரை நோயை குணப்படுத்த வல்லதாகும். நாவற்பழம் உடல் சூட்டினால் ஏற்படும் நீர்சுருக்கினையும் குணமாக்குகின்றது. அழற்சி (அல்சர்), பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பப்பைக் கோளாறுகள், இரத்தப்போக்கு, புற்றுநோய் ஆகியவற்றுக்கும் மருந்தாக இவை பயன்படுகின்றன.நோய் தடுப்பு காரணியாகவும் நாவல் பழங்கள் பயன்படுகின்றது.பெரும்பாடு எனும் அதிகபடியான இரத்தப் போக்கினையும் இவை குறைக்க வல்லதாகும்.[மேற்கோள் தேவை]

பெயர் விளக்கம்[தொகு]

நாவல் பழத்தைத் தின்றால் நாவின் நிறம் கருமையாக மாறும். நா வறண்டு நீர் வேட்கை மிகும். இப்படி நாவின் தன்மையை மாற்றுவதால் 'நா+அல்' (நாவல்) என்றனர்[மேற்கோள் தேவை]. துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம். அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் ஆகிய பெயர்களில் நாவல் பழம் அறியப்படுகிறது. இதில் கருநாவல், கொடி நாவல், சம்பு நாவல் என வகைகள் உள்ளன.

நாவற்பழம்[தொகு]

நாவற்பழம் பழவகைகளில் ஒன்று ஆகும். இப்பழம் குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே கிடைக்கும். இப்பழத்தில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் உள்ளது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 25-12-13 அன்று வெளிவந்த கல்கண்டு வார இதழ். பக்கம்-58

வெளியிணைப்புகள்[தொகு]

நாவற்பழத்தின் பயன்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவல்_(மரம்)&oldid=2569606" இருந்து மீள்விக்கப்பட்டது