முருங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Moringa oleifera
Oleifera Oaxaca.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) இருவித்திலைத் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Rosids
வரிசை: Brassicales
குடும்பம்: Moringaceae
பேரினம்: Moringa
இனம்: M. oleifera
இருசொற்பெயர்
Moringa oleifera
முருங்கை இலை
முருங்கைக் கீரை

முருங்கை மரத்தில் (Moringa oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை தமிழர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு உணவு ஆகும்.

சொற்பிறப்பு[தொகு]

முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும். [1]

பயிர் செய்யும் நாடுகள்[தொகு]

முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஆரம்பம் இமயமலை அடிவாரம் பின் பாக்கித்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானித்தான் ஆகும். பிலிப்பைன்சிலும் ஆப்பிரிக்காவிலும் அதிகமாக இருந்துள்ளது. இது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலும் காணப்படுகிறது. தாய்லாந்து, தாய்வானிலும் பயிராகிறது.

வளரியல்பு[தொகு]

முருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது எனினும், மணல் சார்ந்த அங்ககத் தன்மை அதிகமுள்ள நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. இது வறண்ட பாசன வசதி குறைந்த வெப்பம் அதிகமுள்ள பகுதியிலும் நன்கு வளரக்கூடியது.

தமிழ்நாட்டிலுள்ள வகைகள்[தொகு]

தமிழ்நாட்டில் யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை மற்றும் அந்தந்த இடங்களில் கிடைக்கும் வேறு சில வகைகளும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளால் குடுமியான் மலை-1, பெரியகுளம்-1 திண்டுக்கல் பகுதியில் உள்ள தெப்பத்துபட்டியிலும் ஆகிய வகைகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஓராண்டுப் பயிர்களான இவை ஆறு மாதங்களுக்குப் பின் காய்களை அளிக்கத் தொடங்கும். ஒரு மரத்திலிருந்து 200 முதல் 400 காய்கள் வரை கிடைக்கும்.

பயன்கள்[தொகு]

முருங்கைக் காய் நீளமான அளவில் தடி போன்ற வடிவில் இருக்கும். முன்பெல்லாம் சிறிதாக இருந்த முருங்கைக்காய் தற்போது ஒரு மீட்டர் நீளத்திற்கு வளரக் கூடிய அளவில் புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தமிழர்களிடையே முருங்கைக்காய் பிரட்டல், குழம்பு போன்றவை செய்யப் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை இலை கீரை போல வதக்கி, அல்லது வறுத்து உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

முந்தானை முடிச்சு[தொகு]

கே. பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு எனும் தமிழ்த் திரைப்படத்தில் முருங்கைக்காய் உணவில் சேர்த்துப் பயன்படுத்தி வந்தால் ஆண்களுக்கான காம உணர்வு அதிகரிக்கும் என்கிற கருத்து பரப்பப்பட்டது. அதன் பின்பு தமிழ்நாட்டில் முருங்கைக்காய்க்குத் தனி மதிப்பும், அதன் பயன்பாடும் அதிகரித்து விட்டது.ஆனாலும் இவ்வகை பயிர்கள் மனிதர்களக்கு முகப்பொழிவை தரவல்லது எனவே திருமனத்திற்க்கு முன்பு அதிகமாக உணவில் சேர்க்கபடும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஞா. தேவநேயப் பாவாணர், "பேரா. தெ.பொ.மீ. தமிழுக்கதிகாரியா?"('செந்தமிழ்ச் செல்வி' பெப்பிரவரி சூலை 1980), மறுப்புரை மாண்பு, பக் 62 http://tamilvu.org/library/libindex.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=முருங்கை&oldid=1592090" இருந்து மீள்விக்கப்பட்டது