பொன்னாங்காணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Alternanthera sessilis
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. sessilis
இருசொற் பெயரீடு
Alternanthera sessilis
(L.) R.Br. ex DC.
வேறு பெயர்கள்

Alternanthera glabra
Gomphrena sessilis

சீமைப் பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி அல்லது பொன்னாங்காணி (தாவரவியல் பெயர்:Alternanthera sessilis) ஒரு ஈரப்பாங்கான இடங்களில் வாழும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை, சீதேவி என்னும் வேறு பெயர்களும் உண்டு.[1] இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது [2] இதன் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். மருத்துவத் தேவைகளுக்காகப் பயிரிடப்படுகிறது. பொன்னாங்கண்ணியில் சீமைப்பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரு வகை உண்டு. சித்த மருத்துவத்தில் இது கொடுப்பார், சீீீீீீதை என குறிப்பிடப்படுகிறது.

விளக்கம்[தொகு]

பொன்னாங்காணி கீரையானது சிறிய செடியினமாகும். கரும்பச்சை நிறத்தில் நீர் சத்து நிறைந்த நீண்ட மெல்லிய இலைகளை எதிரடுக்கில் கொண்டு தரையடு வரக்கூடியது. இலைக் கோணங்களில் சிறிய வெள்ளை நிற பூக்கள் பூக்கும், ஈரமான பகுதிகளில் தானே வளரக்கூடிய செடியாகும். இது மருத்துவ குணம் நிறைந்தது. இதனை பயிரிட்டும் வளர்க்கிறார்கள். இதில் சிவப்பு பொன்னாங்காணி என்ற இனமும் உண்டு.

சத்துக்கள்[தொகு]

இந்தக் கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை உள்ளன. பொன்னாங்கண்ணிக்கீரை குளிர்ச்சியை தரவல்லது. இதில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள், பல ஸ்டிரால்கள், அமிலங்கள் உள்ளன. சிட்ரோஸ்டிரால், சிட்சுமோஸ்டிரால், கெஃம்பெஸ்டிரால், ஓலியனோலிக் அமிலம், லுபியால் போன்றவை பெரான்னாங்கண்ணியில் காணப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. டாக்டர் வி.விக்ரம் குமார் (1 செப்டம்பர் 2018). "நலம் கூட்டும் 'பொன்!'". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. Grubben, G.J.H. & Denton, O.A. (2004) Plant Resources of Tropical Africa 2. Vegetables. PROTA Foundation, Wageningen; Backhuys, Leiden; CTA, Wageningen.
  3. மூலிகையின் மறைப்பொருள் குண அகராதி ஆசிரியர் - மரு.மு.ரமேஷ், பதிப்பகம் - திருமகள் நிலையம். தியாகராய நகர், சென்னை-17
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னாங்காணி&oldid=3577934" இலிருந்து மீள்விக்கப்பட்டது