உள்ளடக்கத்துக்குச் செல்

சூபா புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூபா புல்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Fabales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Mimosoideae
சிற்றினம்:
Mimoseae
பேரினம்:
Leucaena
இனம்:
L. leucocephala
இருசொற் பெயரீடு
Leucaena leucocephala
(Jean-Baptiste Lamarck) Hendrik de Wit[1]
வேறு பெயர்கள்

Leucaena glauca (L.) George Bentham[2]
Mimosa glauca L.
Acacia glauca Willd.

Leucaena leucocephala – Museum specimen

சூபா புல் அல்லது இபில்-இபில் (Leucaena leucocephala) மரவகை தீவனப் பயிராகும். சவுண்டல் அல்லது கூபா புல் என்றும் அழைக்கப்படும் இது சிறிய, விரைவான வளர்ச்சியைக் கொண்ட தொட்டாச்சுருங்கிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது[3][4]. சூபா புல், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரமாகும்[5] நீர்ப்பாசனம் இருக்கும் இடங்களில், தூய சூபாபுல் ரகம் ஒரு எக்டேரில் 80-100 டன் அளவிற்கு பசுந்தீவனத்தினைக் கொடுக்கும்[6].

இது தெற்கு மெக்சிக்கோ மற்றும் வடக்கு நடு அமெரிக்கா, (பெலீசு மற்றும் குவாத்தமாலா) ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.[1][7] ஆயினும் அயனமண்டல நாடுகள் எங்கனும் இயற்கையாக வளர்கின்றது. இது white leadtree,[8] jumbay, மற்றும் white popinac.[9] எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது இது கிரெக்க மொழியில் யில் இருந்து வருவிக்கப்பட்ட பெயரான λευκό, "வெள்ளை" என்ற பொருளையும் κέφαλος, "தலை", என்றும் பொருள் தருவதாக இதன் மலர் அழைக்கப்படுகின்றது.[10] இந்தியாவில் 'சுபாபூல்' என வழங்கப்படுகின்றது. இபில்-இபில் விறகு, நார் மற்றும் விலங்குத் தீனி ஆகவும் பயன்படும்.

பயன்கள்

[தொகு]

1970-1980களில் பன்முகப் பயன்பாடுகொண்ட அதிசயமான தாவரமாக இது அறிமுகமானது.[11] இது காலநடைகளுக்கான தீனியாக முன்னேற்றப்பட்ட அதே வேளை இது சில இடங்களில் களை போல பல்கிப் பெருகியதால் முரண்பாடான தாவரமாகவும் பார்க்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Leucaena leucocephala (Lam.) de Wit". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 1995-03-24. Archived from the original on 2009-02-11. பார்க்கப்பட்ட நாள் 2010-01-18.
  2. 2.0 2.1 "Leucaena leucocephala (tree)". Global Invasive Species Database. Invasive Species Specialist Group. பார்க்கப்பட்ட நாள் 2010-01-18.
  3. ந. குப்பன் (30 செப்டம்பர் 2010). "பண்ணை அமைத்து கறவை மாடு வளர்த்தால் லாபம்". தினமணி. http://www.dinamani.com/tamilnadu/article1236016.ece?service=print. பார்த்த நாள்: 4 மார்ச் 2016. 
  4. டாக்டர் கு. சௌந்தரபாண்டியன் (23 நவம்பர் 2011). "சின்னச்சின்ன செய்திகள்". தினமலர். http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=8019&ncat=7. பார்த்த நாள்: 4 மார்ச் 2016. 
  5. டாக்டர் கு. சௌந்தரபாண்டியன் (22 சனவரி 2013). "மரபு சாரா தீவனங்கள் - நவீன தொழில்நுட்பம்". தினமலர்-விவசாய மலர். 
  6. "தீவன உற்பத்தி: மரவகை தீவனப் பயிர்கள்". தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. Hughes, Colin E. (1998). Monograph of Leucaena (Leguminosae-Mimosoideae). Systematic botany monographs v. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-912861-55-X.
  8. "PLANTS Profile for Leucaena leucocephala (white leadtree)". PLANTS Database. United States Department of Agriculture. பார்க்கப்பட்ட நாள் 2009-09-19.
  9. Ipil-ipil, Leucaena glauca, BPI.da.gov.ph
  10. "Leucaena leucocephala". AgroForestryTree Database. World Agroforestry Centre. Archived from the original on 2010-12-19. பார்க்கப்பட்ட நாள் 2010-01-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  11. "Gutteridge, Ross C., and H. Max Shelton. 1998. Forage Tree Legumes in Tropical Agriculture. Tropical Grassland Society of Australia, Inc., 2.1 "Leucaena leucocephala – the Most Widely Used Forage Tree Legume"". Archived from the original on 2016-07-15. பார்க்கப்பட்ட நாள் 2013-05-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூபா_புல்&oldid=3909369" இலிருந்து மீள்விக்கப்பட்டது