வேங்கை (மரம்)
வேங்கை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள்
Rosids |
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Faboideae
|
சிற்றினம்: | Dalbergieae
|
பேரினம்: | |
இனம்: | P. marsupium
|
இருசொற் பெயரீடு | |
Pterocarpus marsupium ரொக்சுபர்கு |
வேங்கை (Pterocarpus marsupium) எனப்படுவது நடுத்தர அளவிற் பெரியதான இலையுதிர் தாவரம் ஒன்றாகும். இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டதான இம்மரம் இந்தியாவின் கேரள-கருநாடக எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]இந்த மரம் 30 மீ உயரம் வரை வளரக் கூடியது. இதன் இலைகள் ஐந்து கூட்டிலைகளைக் கொண்ட கொத்தாக இருக்க, இலைநுனி வளைந்திருக்கும். மரத்தின் பால் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
பயன்பாடு
[தொகு]வேங்கை மரத்தின் (வைரம், இலைகள், பூக்கள் உட்படப்) பல்வேறு பகுதிகளும் நெடுங்காலமாக ஆயுர்வேத மருத்துவத்திற் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. வேங்கை மரவைரம் காயங்களை மூடவும், எரிவு மற்றும் நீரிழிவு போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சிமிலிப்பால் தேசிய வனப் பகுதியில் வாழும் கொல் இனத்தினர் வேங்கை மரப் பட்டையை மா மரப் பட்டை உட்பட வேறு சில மரங்களின் பட்டைகளுடன் அரைத்துப் பெருங்குடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்[2]). கன்னட மக்கள் வேங்கை மரவைரத்தால் ஒரு வகையான கண்ணாடி செய்து அதனை நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.[3]
கணையத்திலிருந்து இன்சுலினை மீளச் சுரக்கச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரேயொரு தாவரப் பொருள் வேங்கை மரப் பிசின் ஆகும்.
சங்க காலம்
[தொகு]ஐங்குறுநூறில் வேங்கை குறிப்பிடப்படுகிறது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ World Conservation Monitoring Centre (1998). Pterocarpus marsupium. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Listed as Vulnerable (VU A1cd v2.3)
- ↑ See Table 1., S.No 25 Rout, S.D.; Thatoi, H.N. (2009). "Ethnomedical practices of Kol tribes in Similipal Biosphere Reserve, Orissa, India". Ethnobotanical Leaflets 13 (March 1, 2009): 379–387. http://www.ethnoleaflets.com/leaflets/kol.htm. பார்த்த நாள்: May 12, 2009.
- ↑ "Vijaysar|vijaisar| Diabetes herbal wood Glass medicine". Holycrystals.in. Archived from the original on 2011-08-29. பார்க்கப்பட்ட நாள் 2011-08-16.
- ↑ ஐங்குறுநூறு(பாடலடி 208)
- ↑ ஐங்குறுநூறு(பாடலடி 276)