துளசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(துழாஅய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
துளசி
Ocimum tenuiflorum 24 08 2012.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Lamiaceae
பேரினம்: Ocimum
இனம்: O. tenuiflorum
இருசொற் பெயரீடு
Ocimum tenuiflorum
லின்.
வேறு பெயர்கள்

Ocimum sanctum

துளசி (Ocimum tenuiflorum) மூலிகை செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு.

வேறு பெயர்கள்[தொகு]

துழாய் (நீல நிற துளசி), துளவம், மாலலங்கல், ஸ்ரீதுளசி, ராமதுளசி.

வகைகள்[தொகு]

நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காட்டுத் துளசி

வளரும் தன்மை[தொகு]

வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 – 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.

காட்டுத் துளசி[தொகு]

இது மருந்துக்குப் பயன்படும் ஒரு மூலிகை. துளசியைப் போல் மணக்காது. வெறுமனே துளசியைத் தின்பது போல இதனை யாரும் தின்னுவதில்லை. இதனைப் பேத்துளசி எனவும் கூறுவர்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி&oldid=2702555" இருந்து மீள்விக்கப்பட்டது