உள்ளடக்கத்துக்குச் செல்

மௌவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌவல்
Botanical illustration of Jasminum officinale
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Lamiales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. officinale
இருசொற் பெயரீடு
Jasminum officinale
கரோலஸ் லின்னேயஸ்

மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை), பன்னீர்ப் பூ எனவும் வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பூ வருடத்திற்கு இரு முறை பூக்கும். மலர்கள் மிகுந்த வாசனையை கொண்டது. இப்பூவைக் கொண்டு மாலைகளும், மலர் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.

சங்கநூல் குறிப்புகள்
 • குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று மௌவல்.[1]
 • குடியிருப்பு மனைகளில் இதனை நட்டு வளர்ப்பர்.[2]
 • இரவில் பூக்கும் இந்த மலர் சுற்றிலும் மணக்கும்.[3]
 • ஊர் ஓரப் பள்ளங்களில் இது வளர்க்கப்படும்.[4]
 • மல்லிகை, மௌவல், சண்பகம் ஆகியவை வெவ்வேறு மலர்கள்.[5]
 • மகளிர் சிரிப்பது போலப் பூக்கும்.[6]
 • சில பெண்களின் பற்களை இக்காலத்தில் ‘அரிசிப்பல்’ எனப் பாராட்டுவர். இதனைச் சங்கப்பாடல்கள் மௌவலோடு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றன.[7]
 • நொச்சிச் செடி ஆற்றங்கரைகளில் வளரும். இது ஆற்று நொச்சி. வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலை ‘மனைநொச்சி’ எனவும் வழங்கினர்.[8]
மௌவல் அல்லது மரமல்லி

வளரியல்பு

[தொகு]

இம்மரம் 18 முதல் 25 மீட்டர் வளரக்கூடியது. 6 முதல் 8 வருடங்களில் மரமாகி 40 வருடங்கள் வரை இருக்கும். பல மண் வகைகளில் வளரக்கூடியவை.

இவற்றையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
 1. குறிஞ்சிப்பாட்டு 81
 2. மனைநடு மௌவல் ஊழ்முகை - நற்றிணை 115,
 3. மனைமரத்து எல்லுறு மௌவல் நாறும் - குறுந்தொகை 19
 4. சிறுகுடி மெல்லவல் மருங்கில் மௌவலும் அரும்பின - நற்றிணை122
 5. பரிபாடல் 12-77
 6. மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப - கலித்தொகை 27-4
 7. மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் - கலித்தொகை 14-3,
 8. மனை இள நொச்சி மௌவல் வால் முகைத் துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண்பல் - அகநானூறு 21-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌவல்&oldid=3798769" இலிருந்து மீள்விக்கப்பட்டது