சூரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரல்
Ziziphus oenoplia
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Rosales
குடும்பம்: Rhamnaceae
பேரினம்: Ziziphus
இனம்: Z. oenoplia
இருசொற் பெயரீடு
Ziziphus oenoplia
(L.) Mill.
வேறு பெயர்கள்
 • Rhamnus oenoplia L.

சூரல் என்பது முள் இருக்கும் காட்டுப் புதர்ச்செடி. சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறும் 99 மலர்களில் இதுவும் ஒன்று.[1]

நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் சூரல் முள்ளை வெட்டிக் கவைக்கோலில் மாட்டித் துக்கிக் கொண்டுவந்து வேலியாகப் போட்டுக்கொள்வர்.

பழங்கால நூல்களில் சூரல்
 • கடுவன் என்னும் ஆண்குரங்கு ஒன்று சூரல் கோல் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு பாறையில் மாரிக்காலத்தில் கொட்டிக்கிடந்த மலர்மொட்டுகளைப் புடைத்து விளையாடியதாம்.[2]
 • ஆற்றுவழிப் பாதையில் சூரல் வேலிபோல் அமைந்திருக்கும் [3]
 • காடுகளைக் கடந்துசெல்ல வழி விடாமல் ஈங்கை முள்ளும், சூரல் முள்ளும் பின்னிப் பிணைந்து கிடக்கும்.[4]
 • பாலைநிலச் சூரலில் இருந்துகொண்டு அணில் பிளிற்றும். ஊர்ச்சேவல் இதல் என்னும் காட்டுக்கோழியோடு கூடி விளையாடும்.[5]

இவற்றையும் பார்க்க[தொகு]

சங்ககால மலர்கள்

வெளியிணைப்புகள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. குறிஞ்சிப்பாட்டு (பாடல் அடி 71)
 2. ஐங்குறுநூறு 275
 3. சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆறு - அகம் 228-9
 4. கொடுமுள் ஈங்கை சூரலொடு மிடைந்த வான்முகை இறும்பு - அகம் 357
 5.  
  சூரல் புறவின் அணில் பிளிற்றும் சூழ்படப்பை
  ஊர்கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும் - ஐந்திணை எழுபது 35

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரல்&oldid=2608760" இலிருந்து மீள்விக்கப்பட்டது