உள்ளடக்கத்துக்குச் செல்

பிண்டி (மரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூத்திருக்கும் பிண்டி மரம், அருகதேவன் அமரும் நிழல்

பிண்டி Caesalpinioideae என்னும் மரத்தை இக்காலத்தில் அசோகமரம் என்பர்.

பிண்டி பரம், மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன. அவை அவற்றின் தோற்றம் பற்றியும், பயன்பாடு பற்றியும் விளக்குகின்றன.

  • காட்டில் பூக்கும்.[1]
  • குறிஞ்சிநில மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று குறிஞ்சி.[2]
  • இப்படி விளையாடிய தலைவியைக் கண்ட தலைவன் தன் காது ஒன்றில் பிண்டிப்பூ செருகியிருந்தான்.[3]
  • முருகனை வழிபடும் சூரரமகளிர் பிண்டித் தளிரை வளைந்த காதுகளில் அணிந்திருந்தார்களாம்.[4]
  • பிண்டி செந்நிற மலர். வையையில் நீராடச் சென்ற மற்றொருத்தி இதனை காதில் குழை போலத் தொங்கும்படி மாட்டியிருந்தாள்.[5]
  • வையையில் நீராடச் சென்ற ஒருத்தி காதில் பிண்டித்தளிரைச் ‘சாய்குழையாக’ மாட்டியிருந்தாள்.[6]
  • திருமால் குடிகொண்டிருந்த இருந்தையூரில் பிண்டி மலர்ந்திருந்தது.[7]
  • மதுரை செல்லும் வழியில் உலகநோன்பிகள் அருகதேவனுக்கு இட்டிருந்த சிலாதலம் (மலைப்பாறை இருக்கை) பொன்னிறப் (செந்நிறப்) பிண்டி நிழலில் இருந்தது. (இது இப்போதுள்ள மீனாட்சிபுரம் ஆனைமலை சமணர் படுக்கைகள்) கோவலன் கண்ணகி காவுந்தி ஆகியோர் இதனை வலம்வந்த பின்னர் மதுரைக்குச் சென்றான்.[8]
  • கோதைதாழ் பிண்டி நிழலில் அறிவன் (அருகன்) கோயில் இருந்தது.[9]
ஆடற்கலை கை முத்திரை
  • பிண்டி என்பது ஆடற்கலையில் கைகாட்டும் முத்திரைகளில் ஒன்று.[10]

இவற்றையும் காண்க

[தொகு]

இந்த மரத்தின் இனம்

காண்க

அடிக்குறிப்பு

[தொகு]
  1. ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த கா - மதுரைக்காஞ்சி 701
  2. குறிஞ்சிப்பாட்டு 88
  3. ஒண்பூம் பிண்டி ஒருகாது செரீஇ – திருமுருகாற்றுப்படை - 119
  4. திருமுருகாற்றுப்படை 31
  5. கடுநீர் வினைக்குழையின் ஞாலச் சிவந்த கடிமலர்ப் பிண்டி மன் காதில் செரீஇ - பரிபாடல் 12-88
  6. பரிபாடல் 11-85
  7. பரிபாடல் திரட்டு 1-8
  8. சிலப்பதிகாரம் 10-21
  9. சிலப்பதிகாரம் 11-3, 15-152
  10. சிலப்பதிகாரம் 3-18
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிண்டி_(மரம்)&oldid=1617035" இலிருந்து மீள்விக்கப்பட்டது