கைதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கைதை
Pandanus tectorius growing in the mountains of Oʻahu in Hawaii
Pandanus tectorius growing in the mountains of Oʻahu in Hawaii
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
Plantae
(தரப்படுத்தப்படாத): Angiosperms
(தரப்படுத்தப்படாத) Monocots
வரிசை: Pandanales
குடும்பம்: Pandanaceae
பேரினம்: Pandanus
இனம்: P. tectorius
இருசொற்பெயர்
Pandanus tectorius
Parkinson
வேறு பெயர்கள்
 • Pandanus baptistii hort.
 • Pandanus chamissonis Gaudich.
 • Pandanus douglasii Gaudich.
 • Pandanus menziesii Gaudich.
 • Pandanus odoratissimus auct. non L. f.
 • Pandanus pedunculatus R.Br.
 • Pandanus sanderi Sander
 • Pandanus stradbrokensis H.St.John
 • Pandanus tomilensis Kaneh.
 • Pandanus veitchii Mast. & T.Moore

கைதை (Pandanus tectorius) என்னும் மலர் தாழை இனம். பூவே முள்ளாகிக் கையில் தைப்பதால் ‘கைதை’ என இதற்குப் பெயரிட்டனர். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம்.

தாழை மலரே தாழம்பூ எனப்படுகிறது. நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.

சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தாழை [1] கைதை [2] ஆகிய இரு மலர்களும் இடம்பெற்றுள்ளன.

கைதை பற்றிச் சங்கப்பாடல் தரும் செய்திகள்[தொகு]

 • கைதை மலர் வானத்தில் சுடர் வீசும் கதிரவன் போலத் தோற்றமளிக்கும். [3]
 • கைதை மலரை மேலே தூக்கி ஒடித்துப் பறிறிப்பார்கள். [4]
 • கைதைப் பூவின் இதழ்கள் உண்மையில் அந்த மரத்தின் கிளைகள். அதில் நாரைகள் பெருமீனுக்காக அயிரை மீனைக் கௌவாமல் காத்திருக்கும். [5]
 • ஞாழல், புன்னை, கைதை, செருந்தி ஆகிய பூக்களில் ஞிமிறு-வண்டு இமிரும். தும்பி-வண்டு ஊதும். [6]
 • படப்பையில் கைதையை உண்ணாமல் எருமை நெய்தல் மலரை மேயும். [7]
 • அன்னப் பறவைகள் கைதையில் அமராமல் ஓடிவிடும். [8]
 • நண்டு கைதைக் கிளைகளில் பதுங்கிக்கொள்ளும். [9]
 • கைதை மரத்தோரம் குதிரைவண்டித் தேரை நிறுத்துவர். [10]

மேலும் காண்க[தொகு]

சங்ககால மலர்கள்
தாழை மலர்

அடிக்குறிப்பு[தொகு]

 1. குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 83)
 2. குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 80)
 3. பெருங்கடல், நீல் நிறப் புன்னை தமி ஒண் கைதை, வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ்சுடர்க், கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று, வைகுறு வனப்பின் தோன்றும் - நற்றிணை 163
 4. மலர் பறித்தல் அடும்பு – கொய்வர். கைதை – தூக்குவர். நெய்தல் குறிவர். கொடுங்கழி மருங்கின் அடும்புமலர் கொய்தும், கைதை தூக்கியும், நெய்தல் குற்றும், நற்றிணை 349
 5. கைதையம் படுசினை நற்றிணை 178
 6. கலித்தொகை 127-1மு
 7. அகம் 100-18
 8. குறுந்தொகை 304
 9. அகம் 170-9
 10. அகம் 210-12
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைதை&oldid=1796518" இருந்து மீள்விக்கப்பட்டது