பீர்க்கு பேரினம்
Appearance
(பீரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பீர்க்கு பேரினம் | |
---|---|
Egyptian luffa with nearly mature fruit | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
துணை சிற்றினம்: | Luffinae
|
பேரினம்: | Luffa |
இனங்கள் | |
| |
வேறு பெயர்கள் | |
பீர்க்கு பேரினம் எனப்படும் (Luffa) இது உணவாகப் பயன்படும் ஒரு வகை தாவரப்பேரினம் ஆகும். இது ஒரு படர்கொடி தாவரம். இது கூட்டு, பொறியல் என பல வகையாக சமைக்கக் கூடியது.
பீரம்
[தொகு]பீரம் என்பது பீர்க்கம்பூ.
- சங்கப் பாடல்களில் பீரம்
- குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று பீரம்.[1]
- புதரில் ஏறி மலரும் பீரம்பூ பொன்னிறம் கொண்டிருக்கும்.[2][3]
- மணம் இல்லாத பூ.[4]
காதலன் பிரிவால் காதலியின் மேனியில் பீர் நிறம் தோன்றும் என்பர்.[5][6][7][8]
மகசூல்
[தொகு]பீர்க்கன்காய்(பீர்க்கங்காய்) விவசாயம் சுலபமானது, மிக குறைந்த நாளில் பலன் தரக்கூடியது.விதை முளைப்பிலிருந்து 35வது நாளில் மகசூல் ஆரம்பமாகின்றது.
வேறு பயன்கள்
[தொகு]மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ குறிஞ்சிப்பாட்டு 92
- ↑ வான்பூப் பொன்போல் பீரொடு புதல்புதல் மலர - நெடுநல்வாடை 14
- ↑ கண் எனக் கருவிளை மலரப், பொன் என இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும். - ஐங்குறுநூறு 464
- ↑ தாதுபடு பீரம் ஊதி நாற்றம் இன்மையின் - நற்றிணை 277
- ↑ இவட்கே நுண்கொடிப் பீரத்து ஊழுறு பூ எனப் பசலை ஊரும் - நற்றிணை 326
- ↑ இன்னள் ஆயினள் நன்னுதல் … நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே - குறுந்தொகை 98
- ↑ காடு இறந்தனரே காதலர், மாமை அரி நுண் பசலை பாஅய்ப் பீரத்து எரிமலர் புரைதல் வேண்டும் - அகநானூறு 45-8
- ↑ மாரிப் பீரத்து அலர்வண்ணம், மடவாள் கொள்ள - சிலப்பதிகாரம் 7-பாடல்38