வகுளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வகுளம்
Maulsari (Mimusops elengi) trees in Kolkata W IMG 2848.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Ericales
குடும்பம்: Sapotaceae
பேரினம்: Mimusops
இனம்: M. elengi L.
இருசொற் பெயரீடு
Mimusops elengi
L.

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என்பது ஓர் சிற்றின [1] மரம் ஆகும். இம்மரம் தெற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது. இதன் பழம் சாப்பிட உகந்தவை. இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தியில் மணம் சேர்க்கவும், மண-எண்ணெய் மணப்பொடி முதலானவற்றைச் செய்யப் பயன்படுத்துகின்றனர்.

சங்க காலம்[தொகு]

குறிஞ்சி நிலத்து மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று வகுளம் [2]
வையை ஆற்றங்கரையில் பூத்திருந்த மலர்களைப் பட்டியலிடும் பாடல் ஒன்று வகுளம் பூவையும் கூறுகிறது.[3]
சிலப்பதிகாரம் என்னும் நூலிலும் இந்த வையைக்கரை மலர்ப்பட்டியலில் வகுளம் பூ உள்ளது.[4]
காவிரிப்பூம்பட்டினத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களிலும் வகுளம் ஒன்று.[5]

திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் இதனை மலைநிலத்தில் புதர் புதராகப் பூக்கும் பூ என்று குறிப்பிடுகிறது.[6]

 • வகுளம் என்பது தலையில் சூடிக்கொள்ளும் 'உச்சிப்பூ' என்னும் அணிகலன். இதனைச் 'சிந்தாமணி' எனவும் கூறுவர். பாடினிக்குப் பரிசாக சங்ககால மன்னர்கள் வழங்கிய 'அழல் அவிர் தாமரை'யை இதனோடு ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்.[7] தலை உச்சியில் அணிந்த இந்த அணிகலன் இக்காலத்தில் நெற்றிச்சுட்டியாக மாறியுள்ளது.[8]

இந்தப் பூவின் சிறிய உருவம் ன்றறியும், மிகுந்த மணம் பற்றியும் நீதி நூல்கள் பாடியஔவையார் குறிப்பிட்டுள்ளார்.[9][10]

படங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. விரியும் கிளைகள் - 23: மகிழ்விக்கும் மகிழம் தி இந்து தமிழ் 26 மார்ச் 2016
 2. குறிஞ்சிப்பாட்டு 70
 3. பரிபாடல் 12-79
 4. சிலப்பதிகாரம் 13-151
 5. மணிமேகலை 3-161
 6. நறுந் தண் தகரம், வகுளம், இவற்றை
  வெறும் புதல்போல் வேண்டாது, வேண்டி, எறிந்து உழுது,
  செந் தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு
  நொந்து இனைய வல்லளோ? நோக்கு! - பாடல் 24


 7. ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி (பெரும்பாணாற்றுப்படை 481-482)

 8. நெற்றிச் சுட்டி


 9. <poem>மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம்
  உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது
  மண் நீரும் ஆகாது அதன் அருகே சிற்றூறல்
  உண் நீரும் ஆகிவிடும்.


அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வகுளம்&oldid=2190970" இருந்து மீள்விக்கப்பட்டது