பெருமூங்கில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உந்தூழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெருமூங்கில்
Bambus berlin botanischer garten.jpg
பெருமூங்கில்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
பேரினம்: Dendrocalamus
இருசொற் பெயரீடு
Dendrocalamus giganteus
Munro

வெதிரம் [Dendrocalamus giganteus] என்பது பெருமூங்கில்.
வேரல் என்பது சிறுமூங்கில்.
பெருமூங்கில் பந்தல்கால் நடப் பயன்படும்.
சிறுமூங்கில் கிழித்துப் கூடை முடையப் பயன்படும். சிறுமூங்கிலை ஊன்றுகோலாகவும் பயன்படுத்துவர்.

வெதிர், வெதிரம், அமை [1] கழை [2] என்னும் சொற்கள் ஒரே புல்லினப் பெருமூங்கில் மரத்தைக் குறிப்பவை.

சில சங்கப்பாடல் குறிப்புகள்
 • வெதிர நுனியிலிலிருந்து குரங்குக்குட்டி தாவும்போது மீன்தூண்டில் மூங்கில் கம்பு வளைந்து நிமிர்வது போல இருக்கும்.[3]
 • வெதிரம் காற்றில் உரசும்போது கந்தில் கட்டப்பட்டிருக்கும் யானை கொட்டாவி விடுவது போன்ற ஒலி வரும்.[4]
 • 'மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே' என்னும் ஏற்றப்பாட்டின் சங்ககாலப் பாடல் அடிகள்.[5]
பயன்
 • இதன் நுனி புல்லாங்குழல் செய்ய உதவும்.[6]
 • அளக்க உதவும் உழக்கு செய்யப் பயன்படும்.[7]
 • தட்டை என்னும் இசைக்கருவி செய்யப் பயன்படும்.[8]
வயலில் நெல் விளையும் வெதிர்
 • வெதிரை வளைத்துக்கட்டி வளையல் செய்துகொள்வர்.[9]
 • வயலில் விளைவது வெதிர்நெல்.[10] இதனை இக்காலத்தில் கார்நெல் என்றும், கொட்டைநெல் என்றும் கூறுவர்.

அடிக்குறிப்பு[தொகு]

 1. வெதிர் நீடமை - குறிந்தொகை 385,
 2. வெதிர் அம் கழை – அகம் 298-8
 3. சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல் குரங்கின் வன்பறழ் பாய்ந்து என இலஞ்சி மீன் எறி தூண்டில் நிவக்கும் - ஐங்குறுநூறு 278
 4. வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை கந்துபிணி யானை அயா உயிர்த்து அன்ன – நற்றிணை 62-1
 5. கண்ணீர் நோன்கழை துயல்வரும் வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே – புறநானூறு 277-5
 6. வெதிர்த் தீங்குழல் – அகம் 399-12
 7. வெதிர் உழக்கு நாழி – கலித்தொகை 76-27
 8. வெதிர் புனைத் தட்டையேன் - நற்றிணை 147-8
 9. பழன வெதிரின் கொடிப் பிணையளள் – ஐங்குறுநூறு 91
 10. வெதிர்படு வெண்ணெல் - 267-11
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமூங்கில்&oldid=2195898" இருந்து மீள்விக்கப்பட்டது