உள்ளடக்கத்துக்குச் செல்

வள்ளி (கொடி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வள்ளிக்கொடி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தாவரம்
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Monocots
வரிசை:
Dioscoreales
குடும்பம்:
Dioscoreaceae
பேரினம்:
Dioscorea
இனம்:
D. pentaphylla
இருசொற் பெயரீடு
Dioscorea pentaphylla
L.
வேறு பெயர்கள் [1]
  • Botryosicyos pentaphyllus (L.) Hochst.
  • Dioscorea triphylla L.
  • Dioscorea digitata Mill.
  • Dioscorea spinosa Burm.
  • Ubium quadrifarium J.F.Gmel.
  • Ubium scandens J.St.-Hil.
  • Dioscorea kleiniana Kunth
  • Hamatris triphylla (L.) Salisb.
  • Dioscorea jacquemontii Hook.f.
  • Dioscorea globifera R.Knuth
  • Dioscorea codonopsidifolia Kamik.
  • Dioscorea changjiangensis F.W.Xing & Z.X.Li

வள்ளி (Dioscorea pentaphylla) என்பது இதன் பெயர் இது ஒரு கொடி வகையாகும். இக்கொடியிலிருந்து வள்ளிக்கிழங்கு கிடைக்கிறது. இதன் வேறு பெயர் வள்ளைக்கொடி என்பதாகும்.

சங்கப்பாடல்களில் வள்ளிக்கொடியும், வள்ளிப் பூவும்

[தொகு]
  • குறிஞ்சிநிலப் பெண்கள் குவித்து விளையாடிய 99 பூக்களில் ஒன்று வள்ளிமலர்.[2]
  • வாடாத வள்ளிக்கொடி வாடும் வறட்சி.[3]
  • வள்ளிக்கொடி வாடியும், தழைத்தும் காணப்படும்.[4]
  • வள்ளிக்கோடி போன்றது பெண் இடுப்பு [5][6]
  • வள்ளி என்பது பற்றிப்படரும் கொடி.[7]
  • வள்ளிக்கொடி மரத்திலும் படரும்.[8]
  • வள்ளிக்கொடி போல் மகளிர்க்குக் கூந்தல் தொங்கும்.[9]
  • வள்ளிக்குக் கிழங்கு உண்டு.[10]
  • பாரியின் பறம்புமலையின் 4 வளங்களில் ஒன்று வள்ளிக்கிழங்கு [11]
வள்ளியங்காடு
  • மழை பொழியுத் மாதத்தில் வள்ளியங்காடு செழித்திருக்கும்.[12] இதன் பசுமையான இலைகள் வாடுவது இல்லை.[13]
வள்ளியங்கானம்
  • வள்ளிப்பூ மலர்ந்திருப்பது வள்ளியங்கானம்.[14]
வள்ளிக்கொடி சுற்றிய மாலை
  • கடம்பமலரை இடையில் வைத்துக் கருமையான வள்ளிக்கொடியைச் சுற்றிக் கட்டிய மாலையை முருகப் பெருமானுக்கு அணிவிப்பர்.[15]

இதையும் காண்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. Kew World Checklist of Selected Plant Families
  2. குறிஞ்சிப்பாட்டு 79
  3. ஊடியவரை உணராமை வாடிய
    வள்ளி முதல் அரிந்தற்று - திருக்குறள் 1304

  4. பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,
    பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்!
    வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
    கானம் கடந்து சென்றார்? - ஐந்திணை ஐம்பது 8

  5. வள்ளி நுண்ணிடை அகநானூறு 286-2,
  6. வள்ளிமருங்குல் புறநானூறு 316-9
  7. காதலி … அல்கலும் வள்ளியின் பிணிக்கும் - நற்றிணை 269-7,
  8. வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் - அகநானூறு 52-1
  9. முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின் புறன் அழிந்து ஒலிவரும் தாழிருங் கூந்தல் - நற்றிணை 295-1
  10. வள்ளி கீழ் வீழா - கலித்தொகை 39-12
  11. கொழுங்கொடி வள்ளி கிழங்கு வீய்க்கும்மே (வெதிர் என்னும் மூங்கில்-நெல், பலா, தேன் ஆகியவை ஏனை 3) - புறநானூறு 109-6
  12. எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களின் முதிர்வாய் வள்ளியங்காடு - முல்லைப்பாட்டு 101,
  13. பாசிலை வாடா வள்ளியங்காடு இறந்தோரே – குறுந்தொகை 216
  14. மலர்ந்த வள்ளியங்கானம் கிழவோன் - ஐங்குறுநூறு 250
  15. கருளுடை வள்ளி இடை தொடுபு இழைத்த உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடக் கமழ் தார் - பரிபாடல் 21-10
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளி_(கொடி)&oldid=2225081" இலிருந்து மீள்விக்கப்பட்டது