உள்ளடக்கத்துக்குச் செல்

குவளை (தாவரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குவளை (மலர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
N. odorata
இருசொற் பெயரீடு
Nymphea odorata
Aiton

குவளை அல்லது வெள்ளை அல்லி எனப்படுவது ஒரு நீர்த்தாவரமும் நிம்பியா குடும்பத் தாவரமும் ஆகும்.

குவளை மலர் குளத்தில் பூக்கும். இது மலைப்பகுதி மகளிர் பறித்துக் குவித்து விளையாடியதாகச் சங்கநூல் குறிப்பிடும் மலர்களில் ஒன்று.[1]

இதில் செங்குவளை, கருங்குவளை, வெண்குவளை என்றெல்லாம் பல வகைகள் உண்டு.

குவளை மலரின் மொட்டு மகளிரின் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும்.[2]

குவளை - மணமுள்ள மலர்
ஆம்பல் - மணமில்லா மலர்
இரண்டும் குளத்தில் பூக்கும் [3]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

-சங்ககால மலர்கள்

வெளியிணைப்புகள்

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. குறிஞ்சிப்பாட்டு (அடி 63)
  2. காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
    மாணிழைக் கண்ணொவ்வோம் என்று. - திருக்குறள்

  3. ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
    விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா
    பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
    கருமங்கள் வேறு படும். நாலடியார் 236
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவளை_(தாவரம்)&oldid=3397647" இலிருந்து மீள்விக்கப்பட்டது