வடவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வடவனம் என்பது ஒரு மலரைக் குறிக்கப் பழங்காலத்தில் வழங்கிய தமிழ்ப் பெயர். வடவனம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டுந்தான் உள்ளது. [1]

துழாஅய் என்னும் மலரும் 99 மலர்களில் ஒன்றாக எண்ணப்படுவதால் வடவனம் என்னும் மலரைத் துளசி என அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு. செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் [2] என்னும் சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம். துளசி போலவே இருக்கும் மற்றொரு செடி திருநீற்றுப்பச்சை.

குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறும் 99 மலர்களின் தொகுப்பில் அது இடம்பெற்றுள்ளது. [3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு)
  2. <poem> இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - திருக்குறள் 91
  3. குறிஞ்சிப்பாட்டு 17

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடவனம்&oldid=1886461" இருந்து மீள்விக்கப்பட்டது