வழை மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வழை மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
O. longifolius
இருசொற் பெயரீடு
Ochrocarpos longifolius
Benth. & Hook.f. ex T.Anderson

வழை (Ochrocarpos longifolius) என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும்.[1]

'கொங்கு முதிர் நறு வழை' எனக் குறிஞ்சிப்பாட்டு விளக்கம் தருகிறது. அதன்படி இந்தப் பூவில் மகரந்தப்பொடிகள் முதிர்ந்து கிடக்கும் காட்சியை இந்தப் படத்தில் கண்டு இன்புறலாம்.
வழைமரம் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்
 • ஆய் அண்டிரனின் குடிப்பூ வழை.[2]
 • குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று வழை.[3]
 • வையை ஆறு அடித்துக்கொண்டுவந்த மலர்களில் ஒன்று.[4]
 • நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.[5]
 • கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும்.[6]
 • குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து.[7]
 • தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்தது.[8]
 • யானை விரும்பும் தழைமரம்.[9]
 • மூங்கில் நெல் அரிசி போட்டுக் குறமகள் வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள்.[10]
 • வழை வளர்ந்த காடு நீர்வளம் மிக்கது ஆகையால் பாலைநிலமாக மாறுவதில்லை.[11]
 • வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர்.[12]
பண்புப்பெயர்
வழைச்சு என்னும் சொல் ‘குழகுழத்’ தன்மையைக் குறிக்கும்.[13]

இவற்றையும் காண்க[தொகு]

சங்ககால மலர்கள்

வெளியிணைப்புகள்[தொகு]

வழை மலர்கள் படம் பி.எல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டுபவை.

அடிக்குறிப்பு[தொகு]

 1. ஆசிரியநிகண்டு நான்காவது மரப்பெயர்த் தொகுதி பாடல் 4
 2. வழைப்பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன் - புறநானூறு 131-2
 3. குறிஞ்சிப்பாட்டு 83
 4. பரிபாடல் 12-5
 5. வழையொடு வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பு - அகநானூறு 8-8
 6. கழை அமல் சிலம்பின் வழை தலை வாட - அகநானூறு 177-7
 7. கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, ஆசினிக் கவினிய பலா - புறநானூறு 158-21
 8. தொண்டையர் வழை அமல் அடுக்கம் - குறுந்தொகை 260
 9. களிறு ... வழை அமல் வியன்காடு சிலம்பப் பிளிறும் - பதிற்றுப்பத்து 41-13
 10. கழைவளர் நெல்லின் அரி உலை ஏற்றி வழை அமல் சாரல் கமழத் துழைஇ - மலைபடுகடாம் 181
 11. வறன் உறல் அறியாத வழை அமல் நறுஞ்சாரல் - கலித்தொகை 53-1
 12. வழைவளர் சாரல் வருடை நன்மான் குழவி வளர்ப்பவர் பாலப் பாராட்டி - கலித்தொகை 50-21
 13. வல் வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த வெந்நீர் அரியல் - வழைச்சு – பெரும்பாணாற்றுப்படை 280
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழை_மரம்&oldid=2968763" இலிருந்து மீள்விக்கப்பட்டது