பயினி
தோற்றம்
| பயினி | |
|---|---|
| Vateria indica, Illustration. | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | Malvales
|
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | V. indica
|
| இருசொற் பெயரீடு | |
| Vateria indica L. | |
| வேறு பெயர்கள் | |
| |
பயின் என்பது அரக்கு. பயின் மரத்தைப் பயினி (Vateria indica) என்றனர். குன்றத்துக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று பயினி.[1]
நாவாய்க்கலக் கப்பலில் ஓட்டை விழும்போது பயின் என்னும் அரக்கால் ஓட்டையைப் பழங்காலத் தமிழர்கள் அடைத்தார்களாம்.[2]
வயிரத்துக்குப் பட்டை தீட்டும் சிறுகாரோடன் குச்சி நுனியையும் வயிரக் கல்லையும் பயின் (அரக்கு) வைத்து இணைத்துக் குச்சியைப் பிடித்துக்கொண்டு சாணைக்கல்லில் பட்டை தீட்டுவான். இந்த வயிரக்கல் போல என்ன துன்பம் வந்தாலும் பிரியமாட்டோம் என்கின்றனர் ஒரு காதலர்.[3]
பட்டை தீட்டும் வயிரக்கல் போலத் துன்புறும்போதும் தன் காதலைத் தாயிடம் கூறமுடியவில்லையே எனக் கவலைப்படுகிறாள் ஒரு தலைவி.[4]
