பச்சிலைப்பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பசும்பிடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Garcinia|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பச்சிலைப்பூ
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Garcinia
இனம்: Template:Taxonomy/GarciniaG. spicata
இருசொற் பெயரீடு
Garcinia spicata
Hook.f.
வேறு பெயர்கள்
  • Garcinia ovalifolia (Roxb.) Hook.f. ex T.Anderson [invalid]
  • Stalagmitis cambogioides Murray (Unresolved)
  • Xanthochymus ovalifolius Bedd.

பச்சிலைப்பூ (Garcinia spicata) என்பது நடுத்தர அளவான மரவகை ஆகும். இது 30 அடிவரை வளரக்கூடிய   குளூசியேசி குடும்பத்தைச் சேர்ந்த மரமாகும். இது இந்தியா, இலங்கையைச் சேர்ந்தது. [1]

விளக்கம்[தொகு]

பசும்பிடி ஓர் மரமாகும். இது பச்சிலை எனப்பட்டது. இதன் கொழுந்து நறுமணம் உள்ளது. இதன் மிகுமணத்தால் இதன்பூ இலைமறை பூவாயிற்று' போலும். இதன் முன்னைய தாவரப்பெயர் லாங்தோ கைமஸ் ஒவாலிபோலியஸ் என்பதாகும். இதன் மலர் இரண்டு அங்குலம் முதல் மூன்று அங்குலம் வரை அகலமானது. பூக்களில் 4 -5 புறவிதழ்கள், 4 -5 அகவிதழ்கள் கொண்டிருக்கும். சூல்முடியானது அகன்றதகவும் வழவழப்பானதாகவும் இருக்கும். இதன் கனியானது பெர்ரி என்ற சதைக்கனி ஆகும். இந்த மரத்தில் பெரும்பாலும் மஞ்சள் நிறமான கசிவு நீர் காணப்படும். இதன் தனியிலை, தோல் போல் தடித்ததாக இருக்கும். இதன் அடிமரம் மஞ்சள் கலந்த வெண்ணிறமானது. மிகவும் வன்மை உடையது. கட்டிட வேலைக்குகந்தது.[2]

காணப்படும் இடங்கள்[தொகு]

இம்மரம் தென் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் தென்னார்க்காடு மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் முதலிய மாவட்டங்களிலும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் தென் கன்னட மாவட்டம் முதல் திருவிதாங்கூர் வரையிலுமுள்ள மலைப்பகுதிகளில் வளரும்.

இலக்கியத்தில் பெயர்[தொகு]

'பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா' என்று கபிலர் (குறிஞ். 70) என்று இத்தாவரத்தைக் குறிப்பிடுகிறார். இதில் காணப்படும் 'பசும் பிடி' என்பதற்குப் 'பச்சிலைப்பூ' என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். 'பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல்' என்பது பரிபாடல் (19: 75), இதற்குப் பரிமேலழகர் ‘பச்சிலையது இளைய கொழுந்து' என்று உரைகண்டார்.

கரும்பார் சோலைப் பெரும்பெயர் கொல்லிப்
பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து

என்றும் பதிற்றுப்பத்தால் (81:24-25) குறிப்பிடப்படுகிறது.

பச்சிலை மரம் தமாலம் பசும்பிடி என்னும் பேரே என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது.[3]

இது ஒரு மரம் எனவும். பெருவாய் மலர் உடையது எனவும். இதன் கொழுந்து மணமுள்ளது எனவும்தான் அறிய முடிகிறது. இதனைக் கொண்டு இதனுடைய உண்மையான தாவரப் பெயரைக் கணிக்க இயலவில்லை. ஆயினும், இதனைப் பச்சிலை எனக் கொண்டு கலைக் களஞ்சியம் இதற்குக் கார்சீனியா ஸாங்தோகைமஸ் என்னும் தாவரப் பெயரைக் குறிப்பிட்டுள்ளது.[4]


குறிப்புகள்[தொகு]

  1. http://www.tradewindsfruit.com/content/bitter-garcinia.htm
  2. சங்க இலக்கியத் தாவரங்கள், டாக்டர் கு. சீநிவாசன், பக்கம் 92-93
  3. சூடாமணி நிகண்டு : 3 I
  4. தமிழ்க் கலைக்களஞ்சியம் : (IV. பக் : 2400)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சிலைப்பூ&oldid=2814048" இருந்து மீள்விக்கப்பட்டது